ஹைக்கூ முதற்றே உலகு! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : “கவிஞர் மதுரை முரளி” பொறியாளர் தொடர் வண்டித் துறை ,மதுரை
ஹைக்கூ முதற்றே உலகு!

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.

மதிப்புரை :கவிஞர்  “மதுரை முரளி”  பொறியாளர் தொடர் வண்டித் துறை ,மதுரை

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769 மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com
பக்கம் : 102 விலை : ரூ. 100


******

கவிஞர் இரா. இரவி அவர்களோடு தொடர்பு கொள்ளும் சந்திப்பு தாமதமாய் எனக்கு நிகழ்ந்தது... என்னுள் பெரிய வருத்தம். முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., முனைவர் இரா.மோகன் போன்ற சான்றோர் பெருமக்களுடன் தொடர்புடைய கவிஞர் இரா.இரவி அவர்கள் என்னையும் அவ்வட்டத்திற்குள் இணைய வைத்திருப்பது இன்பம்... பேரின்பம்...

இனி ... அவரது 15-வது படைப்பான, ‘ஹைக்கூ முதற்றே உலகு’ நூலிற்கு எனது கருத்துரை கேட்டு என்னை பெருமைப்படுத்தியமைக்கு நன்றி.

தலைப்பு  :      ஹைக்கூ முதற்றே உலகு!

பதிப்பு     :      வானதி பதிப்பகம், சென்னை

இதோ... என் பார்வையில் சில கருத்துக்கள்.

பழமொன்ரியு !

      கற்றது கையளவு
      கல்லாதது உலகளவு
      தோல்வியுற்ற மாணவன்!

      கல்வி மட்டுமல்ல அனுபவமும் ஆசான்... தினம் தினம், இதை உணர வேண்டியது கடமை. உன்னதமாய் கூறி விட்டது.

      காண்பது எளிது
      பிறர் குற்றம்
      நம் குற்றம்?

சிறந்த வினா...விடை ... நாம் தேட ... நமக்குள், மிக நன்று. அடுத்து ...

அதிகம் வேண்டும்
      ஞாபகம்
      பொய்யனுக்கு!

      மெய்யின் உயர்வு ... புரிய ஒரு பொய் வேண்டும்.. உலகிற்கு உணர்த்தியது இக்கவிதை.

கலாம்

      அக்னிச் சிறகுகளால்
      அகிலம் பார்த்தவர்
      கலாம்!                      - மிகச்சிறப்பு

தன்னம்பிக்கை முனை

      தயங்குவதில்லை
      தடைகள் கண்டு
      எறும்புகள்!         

உழைப்பின் உயர்வு ...உண்மையாய்

கலைகள்

      ரசித்துப் பார்த்தால்
      அழகு தான்
      திருஷ்டி பொம்மை!

திருஷ்டியும் அழகு தான் ... ஆச்சரியம்!

இயற்கை

      குளத்தில்
      தன் அழகை ரசித்தது
      மரக்கிளை!

அழகாய் ... ஓர் அழகு!

மலர்கள்

      பயணம் எங்கோ
      கோவிலுக்கா? மயானத்திற்கா?
      மாலை!

பயணங்கள் பலதும் புரிவதில்லை ... நமக்கும் தான்!

உயர்திணை

      நன்றி மறவா நாய்
      நன்றி மறக்கும் மனிதன்
      உயர்திணை யார்?

உள்ளத்திற்குள் உரசல் ... நல்ல உராய்வு

நண்பன்

      மாதா பிதா குரு தெய்வம்
      நான்கிலும் மேலானவன்
      நண்பன்!

நட்பின் ஆழம் ... நங்கூரமாய் ... புரிய வைத்து விட்டது.

மருத்துவர்கள்

      கத்தியால் அறுத்தும்
      காப்பார்கள்
      மருத்துவர்கள்!

மருத்துவர் சேவை ... மகத்துவமான சேவை ... நன்றாக ‘நறுக்’கென வெளிப்பாடு.

      இப்படி ... இன்னும், நண்பர் இரா.இரவியின் சமூக சேவை மற்றும் புத்தக வெளியீடுகள் பல்மடங்கு பெற வாழ்த்தும் ...

கருத்துகள்