ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !




ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

சும்மா இருந்த சங்கை
ஊதிக்கெடுத்தனர்
குடியுரிமை சட்டம் திருத்தம் !

கிடப்பதெல்லாம் கிடக்கட்டும்
கிழவியைத் தூக்கி மனையில் வை
குடியுரிமை சட்டம் திருத்தம் !

குடிக்க உரிமை உணடாம்
குடியுரிமை இல்லையாம்
கோமாளிகளின் கூத்து !

சிந்தித்து செயல்படுக
குடிமக்களுக்கு குடியுரிமை மறுக்க 
உமக்குரிமை உண்டா ?

உரிக்கும்போதுதான் அழுதோம்
வாங்கும்போதும் அழுகின்றோம்
வெங்காயம் !

உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத
வெங்காயத்தில்
எல்லாம் இருக்கின்றது !

 என்ன வரம் வேண்டும்
கேட்பதில்லை கடவுள்
பக்தனைக் கண்டு பயம் !   
 
மலிந்துவிட்டனர் மாட்டிற்காக
மனிதனைக் கொல்லும்
மடையர்கள் !

குடியில் தொடங்கி
குடியில் முடிகிறது
குடிகாரர்களின் புத்தாண்டு !

பிரிந்து இணைந்து வெட்டுவதால்
பிரித்து விடுகின்றது
கத்தரிக்கோல் !

பிரிந்தவற்றை இணைத்து
பரவசம் அடைகின்றது
ஊசி  !

வெறுத்தவர்கள் விரும்புகின்றனர்
வரட்டும் அடிக்கடி என்கின்றனர்
தேர்தல் !

ஏங்குகின்றனர் மக்கள் 
பொதுத்தேர்தலை விட
இடைத்தேர்தல் வேண்டி !

அன்று வியந்த பிறநாட்டோர்
இன்று சிரிக்கின்றனர்
நம் தேர்தல்  கண்டு ! 

நல்லது செய்வார் என்று
நம்பியே கெடுகின்ற்னர்
வாக்காளர்கள் !

மனிதனுக்கு மட்டுமல்ல
மாட்டிற்கும் வேண்டுமாம்
ஆதார் ! 

காட்டுங்கள்
உங்கள் வீரத்தை
விலைவாசி குறைப்பில் !

காட்டுங்கள்
உங்கள் திறமையை
வேலைவாய்ப்புகளை வழங்கி !

இறந்தபின்னும் விடவில்லை
பதவி ஆசை அரசியலாருக்கு
சிவலோகபதவி !

 விரும்பு என்றால் அவ்வை
விரும்பவில்லை அரசியல்வாதிகள்
அறம்  செய்திட !  

கருத்துகள்