கவிதை அல்ல விதை... நூல்ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா




கவிதை அல்ல விதை...
நூல்ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி
நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா
நூல் வெளியீடு : திருமதி இர. ஜெயச்சித்ரா .
வடக்கு மாசி வீதி, மதுரை-1
முதற்பதிப்பு : 2007 விலை : ரூ. 40 பக்கம் : 84கவிஞரின் எட்டாவது படைப்பு : கவிதை அல்ல விதை’ என்பதாகும். 2007-ல் வெளிவந்த இந்நூலிற்கு அணிந்துரையை வித்தகக் கவிஞர்; பா.விஜய்-ம், போராசிரியர் தமிழண்ணல் ஆகியோரும்; வழங்கியுள்ளனர்;. கவிஞர் பா. விஜய் குறிப்பிடுகையில் நம்பிக்கை நெருப்பை மனதிற்குள் தூவி விளக்கேற்றும் கவிஞர் இரா. இரவியின் கவிதைகள் மனதில் ஒளி வெளிச்சம் பாய்ச்சும் என்கிறார். பேராசிரியர் தமிழண்ணல் குறிப்பிடுகையில் இணையதளத்தில் மூலம் ஹைகூ கவிதைகளைக் கருவியாகக் கொண்டு தமிழுணர்;வையும் பண்பாட்டையும் பரப்பி வருபவர் கவிஞர் இரா. இரவி என்கிறார்;.காமராசா; முதல் கலாம் வரை அனைவரின் பெருமையும் கவிஞர்; கூறியிருப்பது இந்நூலின் சிறப்பு. இனி கவிதைக்குள் செல்வோம்.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்; :விடுதலை போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றி நூல்.‘இந்தியாவில் நீ பிறக்கவில்லை என்றால்
இந்தியாவிற்கு விடுதலை இல்லை’ என நூலில் நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ்சின் விடுதலை உணர்;வு வெளிப்படுகிறது.’காமராசர்கர்ம வீரர், ஏழைப்பங்காளர், மதிய உணவளித்தவர், கருப்பு காந்தி என்றழைக்கப்பட்ட காமராசர் பற்றி நூல்‘காமராசர்; காலம;தில் பொற்காலம்
காமராசர்; காலமானதால் காலமானது பொற்காலம்.’பெண் விடுதலை மற்றும் பெண் சிசு கொலை :இந்த இருபதாம் நூற்றாண்டில் பெண்கள் ஆண்களால் அடிமைப்பட்டு கிடைக்கின்றனர் என்பதாக நூல்.‘எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காது.
பெண்களுக்கு விடுதலை ஆண்களால் கிடைக்காது.’கருவறையிலேயே கல்லறை கட்டும்
காட்டுமிராண்டித்தனத்திற்கு முடிவு கட்டுவோம்!’‘மாட்டுக்கு பெண் பிறந்தால் மகிழ்ச்சி
பெண்ணிற்கு பெண் பிறந்தால் ஏன் இகழ்ச்சி!-என்று பெண்களின் முன்னேற்ற பதிவுகளாக நூல் முன்வைக்கின்றது.மாற்றுத் திறனாளிகள்:மாற்றுத் திறனாளியாக இருப்பினும் அவர்;களும் சாதிக்க துடிப்பவர்;களே நாம் அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதாக நூல்.பார்வையற்றவர்களின் உழைப்பைப் பாடமாகக் கொள்வோம்.
பார்வையற்றவர்;களின் உயர்;வுக்கு பாலமாக இருப்போம்!தன்னம்பிக்கை குறித்து நூல் :‘தன்னபிக்கையின் பலம் நம்பிக்கையில்
உண்டென்று மூத்தோர் மொழிந்தனர்
மூன்றாவது கை தன்னம்பிக்கை.’இன்றைய அரசியல்வாதிகள் குறித்து நூல்:’’சமாதானப் புறாக்களையே சமைத்துச்
சாப்பிடும் நவீன சிபிச் சக்கரவர்த்திகள்’’ என்றுசிங்களப்படையை கவிதை வெடிகுண்டால் தாக்குகின்றது.சாதி வேற்றுமை களைய வேண்டும் என்று நூல்:‘உடை நெய்தவன் உன் சாதியா?
உணவை விளைவித்தவன் உன் சாதியா?
இல்லத்தை எழுப்பியவன் உன் சாதியா
காலணியைச் செய்தவன் உன் சாதியா?
பிற சாதிகாரர்களின் பங்களிப்பால்
உன் வாழ்க்கை உயர்;ந்துள்ளது.’உலகம் போற்றும் திருக்குறள் எழுதிய வள்ளுவர் பற்றி நூல்;:‘இலக்கியம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு
இலக்கணம் வகுத்த வள்ளுவரே!’இறந்து பல ஆண்டுகள் உருண்டோடிய பொழுதும் நினைக்கப்படுபவர் பாரதியார்; அவர் குறித்து நூல்.மகாத்மா காந்தியிடமும் மனதில் பட்டதை
மறைக்காமல் உரைத்த மாவீரன் பாரதி!’ஆயுள் காப்பீட்டு கழகம் பற்றி நூல்தலைக்கு தலைகவசம் போல்
பொருளாதார தேவைக்கு ஆயுள் காப்பீடு அவசியம்என்பதை நூல்‘தலைவனை இழந்த குடும்பத்தைப் பாதுகாப்பவன்100% விளக்க உண்மை.சகிப்புத்தன்மையுடன் தொண்டாற்றி அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா பற்றி நூல்.அன்னை தெரசா:‘அன்னை தெரசா அளவிற்கு தொண்டு
செய்யாவிட்டாலும் அண்டை வீட்டாருக்கு
தொண்;டு செய்தால் கூடப் போதும்’.மொத்தத்தில் கவிஞரின் நூல் வித்தகக் கவிஞர் பா.விஜய் குறிப்பிட்டது போல் விதைக்குள் விருட்சம். 



கருத்துகள்