கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! அன்னைத் தமிழை மறக்காதே! அடையாளத்தை இழக்காதே!! கவிஞர் இரா. இரவி.

கவிமாமணி சி .வீரபாண்டியத்  தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு !

அன்னைத் தமிழை மறக்காதே! அடையாளத்தை இழக்காதே!!

கவிஞர் இரா. இரவி.

******

அன்னைத் தமிழை மறந்துவிட்டு தமிழர்கள்
ஆங்கிலக்கல்வி பயின்று வருகின்றனர்!பிஞ்சு நெஞ்சங்களில் ஆங்கில நஞ்சு கலப்பதால்
பிள்ளைகள் பாசம் நேசம் மறந்து விடுகின்றனர்!ஆரம்பக்கல்வியை அழகுதமிழில் பயின்றிடுங்கள்
அப்துல்கலாம் மயில்சாமி ஆரம்பக்கல்வி அழகுதமிழே!தாய்மொழிக் கல்வியே சிறந்த கல்வி என்று
தேசப்பிதா காந்தியடிகள் அன்றை உரக்க உரைத்தார்!நல்ல குழந்தைகள் உருவாக தாய்மொழி சிறப்பென்று

நோபல் நாயகன் ரவீந்திரநாத் தாகூரும் சொன்னார் !தானாக சிந்திக்கும் ஆற்றல் தருவது தாய்மொழி
தாய்மார்களே குழந்தைகளை தமிழ் படிக்க வையுங்கள்!ஆங்கில மோகம் அழிந்திடும் நாள் என்றோ?
அகிலம் முழுவதும் தலைவிரித்து ஆடுவது நன்றோ?தமிழ்மொழியிடம் பிச்சை எடுத்து உருவானது ஆங்கிலம்
தமிழ்ச்சொல் ஏராளம் உண்டு ஆங்கிலத்தில் அறியுங்கள்!ஆங்கிலக்வழிக் கல்வியில் பயின்று நாட்டில்
அறிவாளிகள் யாருமே உருவாகவில்லை உணருங்கள்!முட்டையிடும் கோழியென மதிப்பெண் பெறுதல் நன்றல்ல
மூளைக்கு நன்கு புரிந்து தெளிந்து படிப்பதே கல்வி!மனப்பாடம் செய்திடும் இயந்திரமாக மாற்றாதீர்கள்
மண்டையில் ஏற்றிடும் அறிவாளியாக ஆக்குங்கள்!எழுத்தறிவோடு வாழ்ந்தவன் தமிழன் என்பதை
இங்கே கீழடி உணர்த்தி உள்ளது உலகிற்கு!நம் தமிழ்மொழி எழுத்து இருந்த காலத்தில்
நீங்கள் சொல்லும் எந்த மொழியும் பிறக்கவில்லை!பிற்கால மொழிகளை தலையில் வைத்து கூத்தாடாதே
பைந்தமிழ் முதல் மொழிக்கு முதலிடம் தந்திடுக!உலகமொழிகளின் அன்னை மொழி தமிழ்
உரிய இடத்தை உன்னத தமிழுக்கு வழங்கு!

கருத்துகள்