இதயத்தில் ஹைகூ...
நூல்ஆசிரியர் : கவிஞர். இரா. இரவி.
நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா.
வெளியீடு;:திருமதி.இர.ஜெயச்சித்
48., வடக்குமாசி வீதி, மதுரை-1.
பக்கம் : 72. விலை : ரூ. 40.
அய்யா அவர்கள் எனக்கு குரு. அவர் தினமலர் நாளிதழில் 2015-ல் எழுதிய ‘கவிதை எழுதுவோம்’ என்னும் கட்டுரையே முதல் முதலாக என்னை கவிதை எழுத ஊக்கப்படுத்தியது.
அய்யா அவர்களின் கவிதைச் சாரலில் தொடங்கிய கவிபயணம் இன்று இருபத்திஓறாவது நூலான ‘இலக்கிய இணையர் படைப்புலகம்’ ஆக மலர்ந்துள்ளது.
இந்நூல் கவிஞரின் 7-ஆவது நூல். அய்யா அவர்கள் சிற்றிதழ் தொடங்கி இணையம் வரை தம் படைப்புகளை எழுதுபவர். பல்வேறு விருதுகளை பெற்றவர். தற்போது அய்யா அவர்களின் ‘ஹைகூ500’ நூலிற்கு பொதிகை மின்னல் இலக்கிய சிற்றிதழின் சிறந்த நூலுக்கான விருது கிடைத்துள்ளது. ஹைகூ என்ற சொல்லுக்கு தமிழில் வண்ணத் துளிப்பா, குறும்பா, கடுகுக் கவிதை, மத்தாப்புக் கவிதை, மின்மினி கவிதை என பலப்பெயர்கள் உண்டு. இனி ‘இதயத்தில் ஹைகூ’ நூலைக் காண்போம்! நூலுக்கு அணிந்துரை கவிஞர் மு.முருகேஷும். தமிழ்ழாகர் பேராசிரியர் இரா. மோகன் அவர்களாலும்
வழங்கப்-பட்டுள்ளது.
மூட நம்பிக்கை கொண்ட மனிதன் பற்றி நூல்.
ஆறுகால பூசை
ஆலயத்தில் கடவுளுக்கு
பட்டினியில் மனிதன்!
ஆலயத்தில் கடவுளுக்கு
பட்டினியில் மனிதன்!
இன்றும் வறுமை நிலை நிலவி வருகின்றதாக நூல்.
வயிற்றுக்கு கஞ்சி இல்லை
ஆடைக்கு கஞ்சி போட்டான்
சலவைத் தொழிலாளி வறுமை!
ஆடைக்கு கஞ்சி போட்டான்
சலவைத் தொழிலாளி வறுமை!
எழுத்து இடம் மாறினாலும் சொல்லின் பொருள் மாறும்.
உண்மையிலும் உண்மை
எழுத்து இடமாற்றம்
நகரம் - நரகம்’!
எழுத்து இடமாற்றம்
நகரம் - நரகம்’!
இன்றைய நாட்டின் அரசியல் குறித்து நூல்.
இலவச கியாஸ் டி.வி.
இலவச மணமகன்
எப்போது!
இலவச மணமகன்
எப்போது!
காதல் உணர்வாக நூல்.
அவள் நினைவலைகளில் நான்
என் நினைவலைகளில் அவள்
காதல் அலைவரிசை!
என் நினைவலைகளில் அவள்
காதல் அலைவரிசை!
விவசாயிகளின் அவல நிலையாக நூல்.
இனிக்கவில்லை வாழ்க்கை
கரும்பு நட்டதில்
நட்டம்!’
கரும்பு நட்டதில்
நட்டம்!’
ஒரு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுவது டாக்டர் பட்டம். அது இன்று மதிப்பு இழந்து விட்டதாக நூல்.
கௌரவம் இழந்தது
கௌரவ டாக்டர் பட்டம்
நடிகைக்கு வழங்கியதால்!
கௌரவ டாக்டர் பட்டம்
நடிகைக்கு வழங்கியதால்!
மனிதநேயமற்று, விலங்குநேயம் கொள்கின்றனர் மனிதர்கள் என்பதாக நூல்.
அம்மா தாயே
மனிதனை விரட்டி விட்டு
நாய்க்கு கறி சோறு’!
மனிதனை விரட்டி விட்டு
நாய்க்கு கறி சோறு’!
பன்முக நோக்கு கொண்ட இனிய நூல் இதயத்தில்ஹைகூ. நானும் அய்யா அவர்களை போல் சிறந்த படைப்புக்களை படைக்கவேண்டும் என்பது எனது இலட்சியம். அய்யா அவர்களின் கவிபயணம் தொடர வாழ்த்த வயதில்லை வணக்க்ங்களுடன்.
கருத்துகள்
கருத்துரையிடுக