ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
ரசிப்பதில்லை
பசித்தவன்
நிலவை !
மனிதன் கொலை
மாட்டின் பெயரால்
திரும்பியது கற்காலம் !
கட்டாயப்படுத்துகையில்
கசக்கிறது
இந்தி !
ஆங்கிலம் அறிந்தவன்
அறிவாளி என்பது
அறிவீனம் !
தலைவர்களை மட்டுமல்ல
தலைவர்களின் சிலை காப்பதிலும்
தலைவலி காவலர்களுக்கு !
வெள்ளையரை விரும்பாதவர்கள்
தலையில் கூட
இந்தியர்கள் !
அமோக விற்பனை
இந்தியாவில்
தலை மை !
விழுவது இயல்பு
வீழ்ந்தே கிடப்பது
இழுக்கு !
தோட்டம் அழித்துக் கட்டிய
வீட்டின் பெயரோ
தோட்டம் !
அழகில்லை என்றபோதும்
குரலோ இனிமை
குயில் !
திசைகள் இல்லை
நிற்கும்
சூரியனுக்கு !
உதிக்கவுமில்லை
மறையவுமில்லை
சூரியன் !
காட்சிப்பிழை
சுற்றுவது தெரியவில்லை
சுற்றும் பூமி !
சொந்த ஒளியன்று
சூரியனின் இரவல் ஒளி
நிலவொளி !
கருத்துகள்
கருத்துரையிடுக