நூல். : இலக்கிய இணையர் படைப்புலகம் நூல் மதிப்புரை காவல் உதவி ஆணையர் முனைவர் கவிஞர் ஆ மணிவண்ணன் -------------------------- நூலாசிரியர். : ஹைக்கூ திலகம் கவிஞர் இரா.இரவி
நூல். : இலக்கிய இணையர் படைப்புலகம்
நூல் மதிப்புரை
காவல் உதவி ஆணையர் முனைவர் கவிஞர்
ஆ மணிவண்ணன்
--------------------------
நூலாசிரியர். : ஹைக்கூ திலகம் கவிஞர்
இரா.இரவி
ஆ மணிவண்ணன்
--------------------------
நூலாசிரியர். : ஹைக்கூ திலகம் கவிஞர்
இரா.இரவி
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769 மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com
பக்கம் : 230 விலை : ரூ. 175
பக்கம் : 230 விலை : ரூ. 175
சமீபத்தில் நம்மை விட்டுப் பிரிந்த தமிழ்த் தேனீ பேரா.இரா.மோகன் அவர்களும் அவர்களது இணையர் பேரா.நிர்மலா மோகன் அவர்களும் தமிழுக்கு ஆற்றியத் தொண்டினை இத் தமிழ்கூறு நல்லுலகம் நன்கறியும்.
தமிழாகவே வாழ்ந்த அய்யா அவர்களுக்கு அருந்துணையாக இருந்து இல்லத்திலும் இனியத் தமிழ்ச்சேவையிலும் உடனிருந்து உயர்த்திய அம்மா அவர்களும் பல நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு அணி சேர்த்தவர்கள்.
பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை.இருப்பினும் அந்த இணையருக்கு இலக்கியத்தில் அணுக்கத் தொண்டராக இருந்து பெருமை சேர்ப்பவர் இந்த நூலாசிரியர் .
அவ்வப்போது தான் அவர்களது நூல்களை முதல் ரசிகனாய்,முதல் மாணவனாய் இருந்து ருசித்திட்ட அனுபவத்தை அச்சில் பதிவிட்டு வாழ்த்துவதை வழக்கமாக கொண்டிருப்பார்.
மேலும் நூலாசிரியரிடம் பாராட்டத்தக்கது குணங்களில் நான் முதன்மையாகக் கருதுவது தான் ரசித்த அனைத்து இலக்கிய மற்றும் பொது நூல்களுக்கு மதிப்புரை வழங்குவது ஆகும்.
அந்த வரிசையில் இலக்கிய ஆணையர் அவர்களின் அவர்கள் எழுதிய 50 நூல்களுக்குத் தான் எழுதிய மதிப்புரைகளை புகழ்பெற்ற வானதி பதிப்பகம் மூலம் புதிய நூலாக வெளியிட்டு தன் நன்றியைச் சமர்பித்துள்ளார்.
தான் ரசித்து மனமகிழ்ந்த அனைத்து வகை இலக்கியத் தேனை ஒருங்கிணைத்து வழங்கியுள்ளது பாராட்டிற்குரியது.
வாங்கிப் படித்தால் 50 நூல்களை ஒரே நேரத்தில் படித்த திருப்தி ஏற்படுகின்றது.
நன்றி.வாழ்த்துக்கள்
நன்றி.வாழ்த்துக்கள்
நூலிற்கு முதல் மதிப்புரை
கருத்துகள்
கருத்துரையிடுக