காந்திபடிகள் 150 வது பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ! கவிஞர் இரா .இரவி !




காந்திபடிகள் 150  வது பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் !
கவிஞர் இரா .இரவி !


உலகம் போற்றும் 
உண்மை மாமனிதர் 
காந்தியடிகள் !

அன்று வெள்ளையரின்
சிம்மச்  சொப்பனம்
காந்தியடிகள் 
! 

இன்று வெள்ளையரும் 
வணங்கிடும் 
காந்தியடிகள் !  

வெள்ளை மாளிகை 
பாராட்டும் மாமனிதர் 
காந்தியடிகள் !

மனித உரிமைகளின்
முதல் குரல்
காந்தியடிகள் !

சகல   மனிதரையும் 
சமமாக விரும்பியவர்
காந்தியடிகள் !

ஆதிக்க உணர்வை
அடியோடு வெறுத்தவர்
காந்தியடிகள் !

உப்புக்கு வரியா ?
உணர்ச்சியோடு எதிர்த்தவர்
காந்தியடிகள் 
 !

உண்மைக்கு இணையான அழகு
உலகில் இல்லை என்றவர்
காந்தியடிகள் 
 !

மனித ஆற்றலை
மனதார வரவேற்றவர்
காந்தியடிகள் 
 !

உழைக்காமல் உண்பவன் திருடன்
உரைத்தவர்
காந்தியடிகள் 
 !

தில்லையாடி வள்ளி அம்மையின்
தியாகத்தை மதித்தவர்
காந்தியடிகள் 
 !

அகிம்சையை உணர்த்திய
அறிவு ஜீவி
காந்தியடிகள்
 !

ரகசியம் இல்லாத
அதிசய மாமனிதர்
காந்தியடிகள்
 !

கொண்ட
க் கொள்கையில்
குன்றென நின்றவர்
காந்தியடிகள்
 !

திருக்குறள் வழி
வாழ்ந்த நல்லவர்
காந்தியடிகள்
 !

சுட்ட
க் கொடியவனையும்
மன்னித்த மாமனிதர்
காந்தியடிகள்
 !

உலகம் வியக்கும்
ஒப்பில்லாத் தலைவர்
காந்தியடிகள்
 !

வன்முறை தீர்வன்று
வையகத்திற்கு உணர்த்தியவர்
காந்தியடிகள்
 !

நெஞ்சுரத்தின் சிகரம்
நேர்மையின் அகரம்
காந்தியடிகள்
 !

அரை ஆடை அணிந்த
பொதுஉடைமைவாதி
காந்தியடிகள்
 !

மரணதண்டனையை வெறுத்த
மாமனிதர்
காந்தியடிகள் !

அமைதியின் சின்னம்

அடக்கத்தின் திரு உருவம்
காந்தியடிகள்
 !

அன்றே உரைத்தவர்
உலக மயத்தின் தீமையை
காந்தியடிகள்
 !

மனிதருள் மாணிக்கம்
மாமனிதருக்கு இலக்கணம்
காந்தியடிகள்
 !

மரணதண்டனையை வெறுத்த
மாமனிதர்
காந்தியடிகள் 
! 

சகல   மனிதரும்
சமமாக விரும்பியவர்
காந்தியடிகள் 
! 

உண்மைக்கு இணையான அழகு
உலகில் இல்லை என்றவர்
காந்தியடிகள் 
! 

மனித ஆற்றலை
மனதார வரவேற்றவர்
காந்தியடிகள் 
! 

அகிம்சையை உணர்த்திய
அறிவு ஜீவி
காந்தியடிகள்
! 

ரகசியம் இல்லாத
அதிசய மாமனிதர்
காந்தியடிகள் 
! 

கொண்ட
க் கொள்கையில்
குன்றென நின்றவர்
காந்தியடிகள் 
! 

திருக்குறள் வழி
வாழ்ந்த நல்லவர்
காந்தியடிகள் 
! 

சுட்ட
க் கொடியவனையும்
மன்னித்த மாமனிதர்
காந்தியடிகள் 
! 

உலகம் வியக்கும்
ஒப்பில்லாத் தலைவர்
காந்தியடிகள்
! 

வன்முறை தீர்வன்று
வையகத்திற்கு உணர்த்தியவர்
காந்தியடிகள் ! 

நெஞ்சுரத்தின் சிகரம்
நேர்மையின் அகரம்
காந்தியடிகள் 
! 

அரை ஆடை அணிந்த
பொதுஉடைமைவாதி
காந்தியடிகள் 
! 

அமைதியின் சின்னம்
அடக்கத்தின் திரு உருவம்
காந்தியடிகள் 
! 

அன்றே உரைத்தவர்
உலக மயத்தின் தீமையை
காந்தியடிகள் 
! 

மனிதருள் மாணிக்கம்
மாமனிதருக்கு இலக்கணம்
காந்தியடிகள் 
! 

என் வாழ்வே ! எனது செய்தி ! காந்தியடிகள் !  

  கவிஞர் இரா .இரவி 

அரிச்சந்திரன் நாடகம் பார்த்தார் காந்தியடிகள்
அம்மா அப்பா மதிக்கும் சிரவணன் கதை கேட்டார் !

சட்டம் படிக்க இங்கிலாந்து புறப்பட்ட போது
சாதியை விட்டு விலக்கப் போவதாக  மிரட்டினார்கள் !

மிரட்டலுக்கு அஞ்சவில்லை காந்தியடிகள்
மிடுக்குடன் இங்கிலாந்து பயணமானார் !

அன்னைக்கு தந்த சத்தியத்தை உயிரெனக் காத்தார்
அசைவம் மது மாது எதுவும் தொட வில்லை !

தென்ஆப்பிரிக்கா தொடர் வண்டியில் அவமதித்தார்கள்
தன்னம்பிக்கை இழக்கவில்லை  வாழ்ந்து காட்டினார் !

கோச்சு வண்டியில் படியில் அமரச் சொன்னார்
காந்தியடிகள் மறுக்கவே அடித்தான் அசரவில்லை !

வழிக்கு வந்து உள்ளே அமர வைத்தான்
வலி தாங்கிய அகிம்சையை உணர்ந்தான் வண்டிக்காரன் !  

உடலால் மெலிந்து இருந்தபோதும்
உள்ளத்தால் வலிமை மிக்கவர்  காந்தியடிகள் !

தனி ஒரு மனிதனுக்கு ஆடை இல்லை எனில்
தலைப்பாகை ஆடம்பர ஆடைதுறந்து அரையாடையானார் !

வட்ட மேசை மாநாட்டுக்கு இங்கிலாந்து சென்றபோது
வளமான மன்னரை அரையாடையோடு சந்திக்க முடியாது என்றனர் !

இனிமேல் என் ஆடை இதுதான் கொள்கை முடிவு
இப்படியே அனுமதித்தால் வருகிறேன் மறுத்தால் செல்கிறேன் !

எனக்கும் சேர்த்து நீங்களும் உங்கள் மன்னரும்
ஏராளமான ஆடை அணிந்து இருக்கிறீர்கள் என்றார் !

காந்தியடிகளின்   ஒட்டு மொத்த வாழ்க்கையை
ஒரே ஒரு திருக்குறளில் அடக்கி விடலாம் !

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல் .

காந்தியடிகளின் குரு டால்ஸ்டாய்
டால்ஸ்டாயின் குரு திருவள்ளுவர் !

ஒரு கன்னத்தில் அடித்தால் உடன்
மறு கன்னம் காட்டு ! இயேசு பிரான் !

தீமை செய்த பகைவனுக்கும் வெட்கும் வண்ணம்
நன்மை செய் ! திருவள்ளுவர் !

காந்தியடிகளின் விடுதலை விருப்ப உணர்வுதான்
காந்திய வழியில் நெல்சன் மண்டேலாவை உருவாக்கியது !

காந்தியடிகளின் அன்பு மிக்க வாழ்க்கைதான்
கல்கத்தாவில் அன்னை தெரசாவை உருவாக்கியது !

காந்தியடிகளின் நேர்மையான நெஞ்சம்தான்
கர்ம வீரர் காமராசரை தமிழகத்தில் உருவாக்கியது !

காந்தியடிகளின்  உண்மையான போதனைதான்
கக்கன்ஜி என்ற மாமனிதரை உருவாக்கியது !

காந்தியடிகளின்  வாழ்க்கை ! திருவள்ளுவரின் வாக்கே !
காந்தியமும் வள்ளுவமும் வேறு இல்லை ஒன்றே !

காந்தியடிகளுக்கும் காந்தியவாதிகளுக்கும்
மரணம் இல்லை இன்றும் என்றும் வாழ்வார்கள் !

மகாத்மா காந்தி!   கவிஞர் இரா. இரவி.

அகிம்சை என்றால் என்னவென்று தெரியவில்லை
அகிலம் முழுவதும் வன்முறை பரவி விட்டது!

பொறுமை என்றால் என்னவென்று புரியவில்லை
பொறுமை இழந்து சினத்தில் வாழ்கின்றனர்!

எளிமையை என்றும் விரும்பினார் காந்தியடிகள்
எளிமை மறந்து ஆடம்பரத்தில் ஆடுகின்றனர்!

அரசியலில் நேர்மையைக் கடைபிடித்தார் காந்தியடிகள்
அரசியலில் நேர்மை இன்று காணாமல் போனது!

உப்புக்கு வரியா? என்று எதிர்த்தார் காந்தியடிகள்
ஒன்றும் இல்லை வரி இன்றி என்றானது இன்று!

இயந்திரமயமாதலை விரும்பவில்லை காந்தியடிகள்
இயந்திரமாகவே மனிதர்கள் இன்று மாறிவிட்டனர்!

எல்லோரும் என் சகோதரர்கள் என்றார் காந்தியடிகள்
இன்று சகோதரர்களே வெட்டிக் கொல்லும் அவல நிலை!

சாதிமத வேறுபாடு பார்க்காதீர் என்றார் காந்தியடிகள்
சாதிமத வேறுபாட்டால் வன்முறை நடக்குது இன்று!

மேலும் உயர்ந்தார் காந்தியடிகள்!
கவிஞர் இரா. இரவி.
******
காந்தியடிகளைக் கொன்ற கூட்டம் இன்றும்
காந்தி படத்தை சுட்டு மகிழ்கின்றது மூடர் கூட்டம்!

தேசப்பிதாவின் புகழை அழிக்க முடியாது
தேசமெங்கும் பொங்கி எழுந்து உள்ளது!

மதவெறிக்காக ரத்தம் சிந்தியவர் மகாத்மா
மாதிரி ரத்தம் சிந்தி மகிழ்ந்தனர் முட்டாள்கள்!

சூரியனின் ஒளியை சும்பர்களால் மறக்க முடியாது
அறிவுச் சூரியன் அகிலம் போற்றும் காந்தியடிகள்!

காந்தியடிகளின் அஞ்சல்தலை உலகம் முழுவதும்
காந்தியடிகளின் சிலை இன்று உலகம் முழுவதும் !

கோட்சேயை நீங்கள் கொண்டாடக் கொண்டாட
காந்தியடிகளின் புகழ் உயர்ந்து கொண்டே இருக்கும்!

அண்ணலை மறந்தவர்களுக்கு நினைவூட்டியது
அண்மையில் கோட்சே கும்பலின் ஒளிப்படம்!

மதவெறியர்களின் உண்மை முகம் தெரிந்தது
மடையர்களின் முட்டாள்தனம் நன்கு புரிந்தது!

கொடியவன் கோட்சேயை வாழ்கவென்று கோசமிட்டனர்
கொடியவர்களின் கூடாரம் என்பதை மெய்பித்தனர்!

ஒப்பற்ற மாமனிதர் காந்தியடிகளை மூடர் நீங்கள்
ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியவே முடியாது !

காந்தியடிகளுக்கு களங்கம் கற்பிக்கும் கயவர்களை
கூண்டோடு கைது செய்து சிறைப்படுத்துங்கள்!

காந்தியடிகளை மகாத்மா ஆக்கிய மதுரை !             
கவிஞர் இரா .இரவி மதுரை

உலகின் முதல் மனிதன் தமிழன் !
உலகின் முதல் மொழி தமிழ் !

உலகின் முதல்  ஊர் மதுரை !
உலகப் புகழ்  மகாத்மா ஆக்கிய மதுரை !

மதுரைக்கு வந்த 
காந்தியடிகளின் மனம்
ஏழைகளின் இன்னல் கண்டு இரங்கியது

ஆடைக்கு வழியின்றி வாடும் ஏழைகள் இருக்க
ஆடம்பர ஆடைகள் எனக்கு இனி எதற்கு ?

விலை உயர்ந்த ஆடைகளைக் களைந்து
கதராலான அறையாடைக்கு மாறினார் !

காந்தியடிகளுக்கு மனமாற்றத்தை விதைத்தது மதுரை
எல்லோருக்கும்   எல்லாமும் கிடைக்கும் வரை !

என்னுடைய  ஆடை இதுதான் என்றார்
எவ்வளவோ பலர் சொல்லியும் ஏற்க  மறுத்தார் !

எடுத்த முடிவில் இறுதிவரை தீர்க்கமாக இருந்தார்
எங்கு சென்றபோதும் அரை ஆடையிலேயே சென்றார் !

என்னைப் பற்றி எவர் என்ன ? நினைத்தாலும்
எனக்கு கவலை என்றும் இல்லை என்றார் !

பொதுஉடைமை சிந்தனையை ஆடையால் விதைத்து
பூமிக்கு புரிய வைத்த புனிதர் காந்தியடிகள் !

ஏழைகளின் துன்பம் கண்டு  
காந்தியடிகளின்
இரக்கத்தின் வெளிப்பாடே அரையாடை !

மன்னரைப் பார்க்கச் சென்றபோதும் 
கூ
மதுரை அரையாடையிலேயே சென்றார் !

கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றார்
கண்டவர்  பேச்சுக்கு செவி மடுக்காமல் இருந்தார் !

அரையாடை அணிந்த பக்கிரி என்று சிலர்
அறியாமல் பேசியதையும் பொருட்படுத்தாதிருந்தார் !

குழந்தை ஒன்று தாத்தா சட்டை தரட்டுமா ? என்றது
கோடிச் சட்டைகள் தர முடியுமா ? உன்னால் என்றார் !

இந்தியாவின் ஏழ்மையை மறந்துவிட்ட சுயநல
அரசியல்வாதிகளுக்கு ஏழ்மையை உணர்த்திட்டார் !

ஏழ்மையின் குறியீடாக
த் திகழ்ந்தார் காந்தியடிகள்
வறுமையின் ப்டிமமாகத் 
திகழ்ந்தார் காந்தியடிகள்  !

கதராடை  அரையாடை ஆடை மட்டுமல்ல
சமத்துவ சமதர்ம சமுதாயத்தின் விதை அவை !

உலகளாவிய அஞ்சல் தலைகளிலும் சிலைகளிலும்
உன்னத அரையாடைக் கோலத்திலேயே உள்ளார்  !


உலகம் உள்ளவரை ஒப்பற்ற மதுரை இருக்கும்
மதுரை 
உள்ளவரை மகாத்மா புகழ் நிலைக்கும்  !
   
  

கருத்துகள்