சுட்டும் விழி! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் :: செல்வி.இர.ஜெயப்பிரியங்கா.
சுட்டும் விழி!

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.

நூல் விமர்சனம் :: செல்வி.இர.ஜெயப்பிரியங்கா. 

வெளியீடு : மின்னல் கலைக்கூடம். 117 எல்டாம்ஸ் சாலை.
சென்னை - 600 018.    விலை :  ரூ. 40.

கவிஞர் இரா. இரவி அய்யா அவர்கள் எனக்கு குரு. அவர்; தினமலர்; நாளிதழில் 2015--ல் எழுதிய ‘கவிதை எழுதுவோம்' என்னும் கட்டுரையே முதன்முதலாக என்னை கவிதை எழுத ஊக்கப்படுத்தியது. அய்யா அவர்களின் கவிதை சாரலில் தொடங்கிய கவிபயணம் இன்று இருபத்திஓராவது நூலான மறைந்தும் மறையாத தமிழ்தேனீ முனைவா; இரா.மோகன் அவா;களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் வகையில் ‘இலக்கிய இணையர் படைப்புலகம்’ ஆக மலர்;ந்துள்ளது.

கவிஞர்; தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையில் உதவிச்சுற்றுலா அலுவலராக பணியாற்றிக் கொண்டே தம் இலக்கிய பணியும்
ஆற்றி வருகின்றார். பல்வேறு சிற்றிதழ்களில் இவரது படைப்புகள் பிரசுரமாகி வருகின்றன.

இவரது கவிதைகள் பல்வேறு கல்லூரிகளில் பாடப்பகுதியாக வைக்கப்பட்டுள்ளது. கவிமாமணி. சி. வீரபாண்டிய தென்னவன் தலைமையிலான கவியரங்குகளில் கவிதைப் பாடி வருகின்றார். ஹைகூ திலகம்> கவியருவி> கவி முரசு, கலைமாமணி விக்ரமன் விருது, மதிப்புறு முனைவர், ஹைகூ செம்மல், மித்ரா துளிப்பா விருது, துளிப்பாசுடர்; விருது, எழுத்தோலை விருது போன்ற விருதுகளை பெற்றுள்ளார். www.kavimalar.com. இணையம் www.eraeraviblogspot.com போன்ற  வலைப்பூவின் ஆசிரியராக இருந்து கவிதை, கட்டுரை, நூல் விமா;சனம் எழுதி வருகின்றார்.

பல்வேறு இணையங்களில்  கவிஞரின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. சுட்டும் விழி அய்யா அவர்களின் 11--   ஆவது நூல். ஹைக்கூ என்ற சொல்லுக்கு தமிழில் வண்ணத்துளிப்பா, குறும்பா, கடுகுக்கவிதை, மத்தாப்புக் கவிதை, மின்மினிக் கவிதை என பலப்பெயர்;கள் உண்டு. இனி விழிக்குள் நுழைவோம்!

முயற்சி பயிற்சியிலே வெற்றி உள்ளது. பெயரிலோ அதிர்டத்திலோ வெற்றி இல்லை என்பதை நூல்....

      ‘பலனில்லை
      பெயர் மாற்றம்
      எண்ணம் மாற்று’!

இன்று நகரமயமாதல் காரணமாக அழிந்து வரும் பன்னாட்டு நிறுவனங்களால் பல்வேறு வயல்வெளிகள் அழிந்து வருகின்றது என்று நூல்,

      ‘பன்னாட்டு நிறுவனங்களால்
      கொள்ளை போனது
      பச்சை வயல்’!

இன்று நில மாசுபாட்டால் சுற்றுச்சூழல் கெட்டுவருகின்றது என்பதாக  நூல்.

      ‘சுத்தமே சுகம்
      அசுத்தமோ நோய்
      குப்பையில் நகரம்’!

காதலியின் இனிய பெயர் குறித்து நூல்

      ‘இனிது இனிது
      தமிழில் இனிது
      அவள் பெயர்’’'!

தமிழின் தொன்மை மேன்மை சிறப்பு பற்றி நுhல்.

     ‘யுகங்கள் கடந்தும்
     இளமை குன்றவில்லை
     தமிழ்’!

ஒரு சிலை உருவாக உளி அவசியம் ஆனால் இறுதியில் கிடைக்கும் பாராட்டு சிலைக்கு மட்டுமே உளிக்கு கிடையாது.

      ‘சோகத்தில் உளி
      பாராட்டு வாங்கினார்
      சிலையோடு சிற்பி’!

புத்தருக்கு போதிமரத்தடியில் ஞானம் பிறந்தது. இன்று ஞானம் அளிக்க மரமும் இல்லை. ஞானம் பெற இன்றைய இளைய தலைமுறையும் இல்லை.

      ‘கிடைக்கவில்லை
      எங்கு தேடியும்
      போதி மரம்’!

2019-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ள அய்யா அவா;களின் ‘ஹைகூ 500’ நூலிற்கு பொதிகை மின்னல் இலக்கிய சிற்றிதழின் சிறந்த நூலுக்கான விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது கவிஞரின் சுட்டும் விழி ஹைகூ நூல் பன்முக பார்வையான இனிய  நூல்.

கருத்துகள்