ஹைக்கூ முதற்றே உலகு! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா !









ஹைக்கூ முதற்றே உலகு!

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !

நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா !

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769 மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.comபக்கம் : 102 விலை : ரூ. 100******

கவிஞர் இரா. இரவி அய்யா அவர்;கள் எனக்கு குரு. அவர்தினமலர்நாளிதழில் 2015-ல் எழுதிய ‘கவிதை எழுதுவோம் என்னும் கட்டுரையே என்னை கவிதைகள் எழுத ஊக்கப்படுத்தியது.

அய்யா அவர்களின் கவிதை சாரலில் தொடங்கிய கவிபயணம் இன்று இருபத்திஒராவது நூலாக மறைந்தும்  மறையாத தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அவர்;களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் வகையில் ‘இலக்கிய இணையர் படைப்புலகம் மலர உள்ளது.

கவிஞார் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையில் உதவிச் சுற்றுலா அலுவலராக பணியாற்றிக் கொண்டே தம் இலக்கிய பணியும் தொடர்;ந்து வருகின்றார். கவிமாமணி. சி.வீரபாண்டிய தென்னவன்தலைமையிலான கவியரங்குகளில் கவிதை பாடி வருகின்றார். பல்வேறு இலக்கிய சிற்றிதழ்களில் இவரது படைப்புக்கள் பிரசுரமாகி வருகின்றது. இவரது கவிதைகள் பல்வேறு கல்லுரிகளில் பாடப்பகுதியாக வைக்கப்பட்டுள்ளது.

ஹைக்கூதிலகம்;, கவியருவி, கவிமுரசு, கலைமாமணி விக்ரமன் விருது, மதிப்புறு முனைவர், ஹைகூ செம்மல், மித்ரா துளிப்பா விருது, துளிப்பா சுடர் விருது, எழுத்தோலை விருது போன்ற விருதுகளை பெற்றுள்ளார். www.kavimalar.comwww.eraeravi.blogspot.com வலைப்பூவின் ஆசிரியராக இருந்து கவிதை, கட்டுரை, நூல் விமர்சனம் எழுதி வருகின்றார். பல்வேறு இணையங்களில் கவிஞரின் படைப்புக்கள் இடம்பெற்றுள்ளது.

ஹைகூ முதற்றே உலகு கவிஞரின் 15-ஆவது நூல். நூலுக்கு அணிந்துரை வழங்கிய இரு சான்றோர்தமிழ்த்தேனீ. பேராசிரியர் அய்யா இரா.மோகன் மற்றும் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்களும் ஆவர். நூலின் முன் அட்டை படத்தில் கவிஞரின் படமும்

பின் அட்டை படத்தில் அணிந்துரை அளித்த இரு சான்றோரின் வாழ்த்துரையும் இடம்பெற்றுள்ளது.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி     பகவன் முதற்றே உலகு.                   ----என்பது குறள்.

எழுத்துக்கள் அனைத்திற்கும் அகரம் முதலாக அமைகிறது. அதுபோன்று உலக உயிர்கள் அனைத்திற்கும் இறைவன்  முதல்வனாக விளங்குகிறான். அது போல ஹைகூ திலகம் கவிஞர் இரா. இரவி அவர்களின் ஹைகூ முதற்றே உலகு என்னும் நூல் பிற ஹைகூ படைப்பாளர்;களுக்கும் கவிஞர்-;களுக்கும் முன்னோடி. மொத்தம் 30 தலைப்புகளில் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

மாமனிதர்இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல் கலாம் பற்றி நூல்

     மாணவர்;களை விரும்பியவர்
     
     மாணவர்கள் விரும்பியவர்
     
     கலாம்!

     தன்னம்பிக்கை பற்றி நூல்

     படிப்பதை விட
     
     படைப்பதே சிறப்பு
     
     வரலாறு!

கலை கலைக்காகவே என்பது குறித்து நூல்

          தனித்து இருந்தாலும்
     
     சேர்;ந்து இருந்தாலும் அழகு
     
     கலைப் பொருட்கள்!

இயற்கை சித்தரிப்பு குறித்து நூல்

     பிடிக்க ஆசை
     
     பிடிபடுவதில்லை
     
     வண்ணத்துப்பூச்சி!

               அருகே முட்கள்               ஆனாலும் மகிழ்வாக               ரோசா!

          இரசித்துப் பார்;த்தால்
     
     அழகு தான்
     
     எருக்கம் பூவும்!

அறிவின் தொடக்கம் என்பதாக நூல்

          ஏன்? எதற்குஎப்படி?
     
     எதனால் கேள்விகள்
     
     அறிவின் தொடக்கம்!

இன்றைய அரசியல் நிலை பற்றி கவிஞர்முன்னதாகவே எள்ளல் சுவையுடன்.

     தரமாட்டான் அவ்வைக்கு
     
     நெல்லிக்கனி
     
     இன்றைய அதியமான்!

என கவிஞர் நகைச்சுவையாக கவிதைப் படைத்துள்ளார்.

     பல அறிவு சான்றோர் உருவாக காரணம் நூலகங்கள்.

          அறிவாளிகள் இருக்கும்          அறிவார்ந்த இடம்          நூலகம்!

மனிதநேயம் குறித்து நூல்

     போகும் உயிரைப் போராடி
     
     மீட்பவர்கள்
     
     மருத்துவர்கள்!

          பிராh;த்தனையிலும்               சிறந்தது பிறர்;
               கண்ணீர் துடைப்பது!

நமக்கு மிகவும் அன்பானவரானாலும் தவறு செய்தால் அதையும் இடித்துரைக்க வேண்டும் என்பதை நூல்

     கண்டிக்க வேண்டும்
     
     தவறு செய்தது
     
     அன்பானவரானாலும்!

முயற்;சி என்பது நமக்கு வேண்டும் என்பதை நூல்

     தயங்குவதில்லை
     
     தடைகள் கண்டு
     
     எறும்புகள்!

          உடல் பலத்திலும்
     
          உயர்ந்தது
     
          உள்ளத்தின் பலம்!

கைரேகை போல அழியாத நட்பு பற்றி நூல்

          ஏணியாகவும் இருப்பான்          தோணியாகவும் இருப்பான்          நண்பன்!

ஹைகூ முதற்றே உலகு பன்முக பார்;வைக் கொண்ட வாசகரின் இரசனைக்கு ஏற்ற இனிய நூல்.

கருத்துகள்