விழிகளில் ஹைக்கூ.... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.






விழிகளில் ஹைக்கூ....

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.

நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.


வெளியீடு : திருமதி. இர. ஜெயச்சித்ரா.

வடக்கு மாசி வீதி, மதுரை----1

நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.

பக்கம் : 64.     விலை : 25.         முதற்பதிப்பு : 2003.

கவிஞர் இரா. இரவி அய்யா அவர்கள் எனக்கு குரு. அவர்; தினமலர்; நாளிதழில் 2015--ல் எழுதிய கவிதை எழுதுவோம் என்னும் கட்டுரையே முதன்முதலாக என்னை கவிதை எழுத ஊக்கப்படுத்தியது. அய்யா அவர்களின் கவிதை சாரலில் தொடங்கிய கவிபயணம் இன்று இருபத்திஓராவது நூலான மறைந்தும் மறையாத தமிழ்தேனீ முனைவா; இரா.மோகன் அவா;களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் வகையில் ‘இலக்கிய இணையர் படைப்புலகம்’ மலர உள்ளது.

’கவிஞர்; தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையில் உதவிச்சுற்றுலா அலுவலராக பணியாற்றிக் கொண்டே தம் இலக்கிய பணியும் தொடா;ந்து ஆற்றி வருகின்றார். கவிமாமணி.சி.வீரபாண்டிய தென்னவன் தலைமையிலான கவியரங்குகளில் கவிபாடி வருகின்றார். பல்வேறு இலக்கிய சிற்றிதழ்கள் மற்றும் இணையங்களில்   இவரது படைப்புகள் பிரசுரமாகி வருகின்றன. இவரது கவிதைகள் பல்வேறு கல்லூரிகளில் பாடப்பகுதியாக வைக்கப்பட்டுள்ளது. ஹைகூ திலகம்> கவியருவி> கவி முரசு, கலைமாமணி விக்ரமன் விருது, மதிப்புறு முனைவர், ஹைகூ செம்மல், மித்ரா துளிப்பா விருது, துளிப்பாசுடர்; விருது, எழுத்தோலை விருது போன்ற விருதுகளை பெற்றுள்ளார். www.kavimalar.com.  www.eraeraviblogspot.com போன்ற இணையம் வலைப்பூவின் ஆசிரியராக இருந்து கவிதை, கட்டுரை, நூல் விமா;சனம் எழுதி வருகின்றார்.; பல்வேறு இணையங்களின் கவிஞரின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. விழிகளில் ஹைகூ கவிஞரின் மூன்றாவது நூல். இந்நூலுக்கு அணிந்துரை வழங்கும்      இரு சான்றோர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் மற்றும் ஹைகூ கவிஞர் மு. முருகேஷ் ஆவர். முன் அட்டைப்படம் ஜெர்மனி ஓவியரால் வடிவமைக்கப்-பட்டுள்ளது. பின் அட்டைப்படத்தில் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் படமும் கையொப்பமும் இடம் பெற்றுள்ளது. இந்நூல் இளைஞர்களின் எழுச்சி நாயகர் அப்துல்கலாம் அவர்களுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.

இனி நூலுக்குள் நுழைவோம்!

இன்று வீட்டின் வரவேற்பறையில் தொல்லைக்காட்சியாகிவிட்ட தொலைக்காட்சி பற்றி நூல்

     ‘மக்களை முட்டாளக்குவதில்
     போட்டா போட்டி
     தொல்லைக்காட்சி!”

          ‘வீட்டிற்குள்ளேயே
          மூளையைத் திருடும்
          தொல்லைக் காட்சி!’

தமிழ்வழிக் கல்வியின் சிறப்பு பற்றி நூல்.

‘கூலி கொடுத்தும்
     கரும்பு தின்ன மறுக்கின்றனர்;
     தமிழ்வழிக் கல்வி!’

          ‘தமிழன் என்று சொல்லடா
          தலை நிமிர்ந்து நில்லடா
          ஆங்கிலக் கையொப்பம் ஏனடா!’

இன்றைய அரசியல் அவலம் குறித்து நூல்.

     படித்தவன் பாட்டை
     எழுதியவன் ஏட்டை
     அரசியல்வாதி நாட்டை

     கேட்போரின் மதி
     கேழ்வரகில் நெய்
     தேர்;தல் அறிக்கை!

காதலைப் பாடாத கவிஞர்; இல்லை.

காதல் குறித்து தம் ஹைகூ கவிதையாக நூல்

     ‘கடினமானதல்ல
     பிரியமான வேலை
     காதல்!’

          ‘உப்பிட்டவரை
          உள்ளவும் நிலை
          இதயம் இட்டவளை!’

     ‘சுகமானது
     சுவையானது
     அவளுக்கான காத்திருப்பு!’

நாம் அகற்றவேண்டிய மூடநம்பிக்கை பற்றி நூல்!

     ‘சுமங்கலி பூஜையன்று
     அம்மன் தாலி திருட்டு
     கவலையாய் பக்தை!’

          ‘கம்பி எண்ணுகிறார்
          விடுதலைக்கு ஏங்கி
          குறிசொன்ன சாமியார்!’

     ஒருகண் தாராயோ
     விழி இழந்தவருக்கு
     ஆயிரம் கண் மகமாயி!’

பெண் சிசு கொலை பற்றி நூல்

     ‘முற்றமெல்லாம் பொன்
     மூன்றாவது பெண்
     முடித்தனர்; கருவிலேயே!’

          ‘கள்ளிச் செடிகளை
          நாடு கடத்துங்கள்
          பாவம் பெண் சிசுக்கள்!’

கொம்பு தேனாய் மாறிய அரசு வேலை குறித்து நூல்.

     ‘கானல் நீர்
     கிடைத்தால் அதிசயம்
     அரசு வேலை!’

குழந்தை தொழிலாளரின் அவல நிலையை நூல்

     ‘மலராமலே
     கருகுகின்றன
     குழந்தை தொழிலாளிகள்!’

‘சீருடையில் சிங்காரமாய்
     சிறுமி பள்ளி சென்றது
     ஏக்கத்துடன் குழந்தை தொழிலாளி!’

கண்டம் வீட்டு கண்டம் தாண்ட பயன்பட்டுள்ளது இணையம் என்பது குறித்து நூலானது.

பயணிக்காமலே
     உலக தரிசனம்
     இணையம்!’

விழிகளில் ஹைகூ கவிஞரின் பன்முக பார்வை கொண்ட இனிய நூல்.

கருத்துகள்