"மதுரை வாசகர் வட்டம் "தொடங்கப்பட்டது .


  "மதுரை வாசகர் வட்டம் "தொடங்கப்பட்டது . 

.மதுரை அய்யர் பங்களா ஐயப்பன் நகர் முதல் குறுக்குத்தெருவில் உள்ள குடிமக்கள் சமம் அலுவலகத்தில் நண்பர்கள் கூடி "மதுரை வாசகர் வட்டம் "தொடங்கப்பட்டது . திரு சண்முகவேலு அமைப்பாளராகவும் திரு .ராமமூர்த்தி  ஒருங்கிணைப்பாளராவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .

கவிஞர் இரா .இரவி ,ஆ .முத்துக் கிருட்டிணன் ,சண்முகநாதன் ,ராசேந்திரன் ,வீரராகவ  பெருமாள் ,செயராமன்   ,கணேசன் ,ரா .கல்யாணி ,காளியப்பன் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்ப்பட்டனர் .

அமைப்பாளர் சண்முகவேலு  அவர்கள் எழுத்தாளர் எஸ் .இராம கிருஷ்ணன் அவர்களின் இரண்டு நூல்கள் பற்றி விரிவான மதிப்புரை நல்கினார் .அவரை "மதுரை வாசகர் வட்டம் " சார்பாக கவிஞர் இரா .இரவி பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார் . 








கருத்துகள்

கருத்துரையிடுக