புத்தரின் புன்னகை ! கவிஞர் இரா .இரவி !





புத்தரின் புன்னகை ! கவிஞர் இரா .இரவி !

புத்தரின் புன்னகை வெளியே தெரிவதில்லை
போதித்த போதனை பின்பற்றாத மக்கள் !

ஆசையே அழிவிற்கு காரணம் என்றேன்
ஆசை பிடித்து அலைகின்றனர் பக்தர்கள் !

பெரிய பெரிய சிலை நான் விரும்பவில்லை
பெரிதாக சிலை வைத்து  எந்த பயனுமில்லை !

என்னை வணங்குவதை விடுத்து நீங்கள்
என்னை பின்பிற்றினால் மனம் மகிழ்வேன் !

எளிமையை  விரும்புபவன்  நான் என்னை
ஏனோ பிரமாண்டப் படுத்துகின்றனர் !

மூடநம்பிக்கைகளை முற்றாக வெறுத்தவன் நான்
மூடநம்பிக்கை என் பெயரிலும் நடத்துகின்றனர் !


எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய் என்றேன்
எல்லா உயிர்களிடத்தும் வம்பு செய்கின்றனர் !

சக மனிதனை அன்புடன்  நேசிக்கச் சொன்னேன்
சக  மனிதனை  பாவிகள்   கொன்று குவித்தனர் !

கருத்துகள்