ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
தங்கம் விலை ஏற ஏற
தள்ளிப் போகின்றன
ஏழைகளின் திருமணம் !
தள்ளிப் போகின்றன
ஏழைகளின் திருமணம் !
தங்கம் விலை ஏற ஏற
பெருகி வருகின்றன
கொள்ளை கொலை !
பெட்ரோல் விலை ஏற ஏற
ஏறுகின்றன
பொருட்களின் விலை !
அமருவதில்லை
பறவைகள்
பட்ட மரங்களில் !
புறம் பேசுபவர்களை
புறம் தள்ளுங்கள் முன்னேறலாம் !
கொடுக்காதீர்கள்
காதை
பொறாமைக்காரர்களிடம் !
படுத்தகோலம் பார்த்தவர்களே
நின்ற கோலமும் பார்ப்பதால்
கஞ்சியானது காஞ்சி !
நின்ற கோலமும் பார்ப்பதால்
கஞ்சியானது காஞ்சி !
விரலில் மை வையுங்கள்
ஒருவர் ஒரு முறை
பார்க்கட்டும் !
கூட்டம் கூட்டம் கூட்டம்
கட்டுக்கதைக் கேட்டு
கூடுது கூட்டம் !
கருத்துகள்
கருத்துரையிடுக