பறவை ! கவிஞர் இரா .இரவி !





பறவை ! கவிஞர் இரா .இரவி !

மனிதன் அன்று விமானம் கண்டுபிடிக்க
மனதில் காரணமான காரணி பறவை !

ஆறு அறிவு மனிதனால் முடியாது
அஃறிணை  பறவையால் பறக்க முடியும் !

சிறகுகள் உள்ள எல்லாப் பறவைகளும்
சிறகடித்துப் பறப்பதில்லை வானில் !

சிறகுகளின்  பயனை உணராது  உள்ளன
சிந்தையைப் பறந்திட பயன்படுத்தவில்லை !

இப்படித்தான் இன்றும் சில மனிதர்களும்
இனிய வாய்ப்பையைப் பயன்படுத்தவில்லை !

சின்னக் குருவியும் பறவை இனம்தான்
பெரிய பருந்தும் பறவை இனம்தான் !

குருவியின் இயல்பு மிக மிதமானது
பருந்தின் இயல்பு மிக முரடானது !

மனிதர்களில் குருவிகளும் உண்டு
மனிதர்களில் பருந்துகளும் உண்டு !

கருத்துகள்