சிரிப்பு! கவிஞர் இரா. இரவி.
நகைச்சுவை உணர்வு இல்லை என்றால் என்றோ
நான் தற்கொலை செய்திருப்பேன் என்றார் காந்தியடிகள்!
கவலைகளை மறந்திட உதவிடும் சிரிப்பு
கள்ளங்கபடமற்ற குழந்தையின் உள்ளத்தில் சிரிப்பு!
புன்னகை புரிந்தால் நடக்கும் செயல்கள்
பூத்த முகம் சாதிக்கும் செயல்கள்!
சிரிக்க வைப்பவர்களை விரும்பிடும் உலகம்
சிரிப்போடு சேர்த்து சிந்தனையும் விதைக்கலாம்!
பிறரை கேலி செய்து சிரிப்பது குற்றம்
பிறரை சிரிக்க வைப்பது சிறந்த செயலாகும்!
துன்பம் வருகையில் துவளாமல் சிரிக்கச் சொன்னார்
திருக்குறளில் திருவள்ளுவப் பெருந்தகை!
முகத்தில் சிரிப்பை அணிந்து இருந்தால்
முகம் பார்ப்போரும் முன்மொழிவர் சிரிப்பை!
ஆற்றிவு படைத்த மனிதர்களுக்கு மட்டுமே
அற்புதமாக் அமைந்த சிரிப்பைப் பயன்படுத்துவோமே
கருத்துகள்
கருத்துரையிடுக