ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி.




ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி.

அழுகை நிறுத்தியது
அலைபேசி கற்றதும்
குழந்தை!

வீட்டுக்கு வீடு
வாசல் போலவே
பிரச்சனை!

நான்கு சுவருக்குள் நடப்பதை
நாடு முழுவதும் ரசிப்பு
தொலைக்காட்சி நிகழ்ச்சி!

வெளியில் இல்லை
உன்னிடம் உள்ளது
நிம்மதி!

பல்டி அடிப்பதில்
வல்லரசர்கள்
அரசியல்வாதிகள்!

சின்னத் திருடனுக்குச் சிறை
பெரிய திருடனுக்கு
வெளிநாடு!

பாகவதரை மிஞ்சினார்கள்
சுதிமாற்றிப் பாடுவதில்
அரசியல்வாதிகள்!

குற்றவாளிகளிடம்
சிறையிலும் பாரபட்சம்
முதல் வகுப்பு!

இந்திரன் சந்திரன் அன்று
அயோக்கியன் என்று இன்று
அரசியல்வாதி பேச்சு!

வருடா வருடம்
பரப்புகின்றனர் வதந்தி
கடவுளின் பெயரால்!

காமராசர் கக்கன்
காலத்தோடு முடிந்தது
அரசியலில் நேர்மை!

பாவத்தில் பங்கு
நிறைந்து வழிந்தது
கோயில் உண்டியல்!

தருகின்றனர் முன்னுரிமை
பித்தலாட்டக்காரனுக்கு
அரசியலில்!

ஒன்றும் ஒன்றும்
இரண்டல்ல ஒன்று
காதல் கணக்கு!

நியாய விலைக் கடையில்
அநியாயம்
எடை குறைவு!

ஒருவரை ஒருவர் மிஞ்சினர்
ஊழல் புரிவதில்
அரசியல்வாதிகள்!

சேர்ந்து இருந்தனர்
குடும்ப உறுப்பினர்கள்
குடும்ப அட்டையில்!

விடுமுறை நாட்களில்
குடிமகன்களால் நிறைகிறது
மதுக்கடை!

கருத்துகள்