ஹைக்கூ உலா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை ;மா.கணேஷ்.கொன்னையூர்.பொன்னமராவதி வட்டம்.புதுக்கோட்டை மாவட்டம்.




ஹைக்கூ உலா !

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !

மதிப்புரை ;மா.கணேஷ்.கொன்னையூர்.பொன்னமராவதி வட்டம்.புதுக்கோட்டை மாவட்டம்.


வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769 மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com விலை : ரூ. 80.


 ஹைக்கூ உலா படித்தேன் மிகச் சிறப்பாக உள்ளது. அதிலும் நூலுக்கான தலைப்பு மிகச் சிறந்ததாக உள்ளது. ஏனென்றால் பல நல்ல கருத்துக்களை கவிதை வடிவில் இந்நூலின் வாயிலாக மக்கள் மனதில் உலாவ விட்டது. மேலும் எனது குருநாதர் முதுமுனைவர்  வெ.இறையன்பு இ.ஆ.ப. மற்றும் தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் இவர்களின் அணிந்துரையும் மிகச் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. 

    கவிஞர் இரா .இரவியின்  என்னுரை நூலுக்கு மேலும் மெருகூட்டியது தனிச் சிறப்பு.

ஒரு புத்தகம் படிக்கும் வாசகரை முற்றிலும் மாற்றும் சக்தி கொண்டது என்பதினை இந்நூலின் வாயிலாக நான் அறிந்த உண்மை.

சுவாமி விவேகானந்தர் கூற்று போன்று நீ எதுவாக  நினைக்கின்றாயோ அதுவாகவே மாறுவாய் என்பது இந்நூலின் வாயிலாக அறிய நேர்ந்தது.

ஏனென்றால் அய்யா திரு.அப்துல்கலாம் கூறியது போன்று எத்தனை நூல்களை வாங்கினாய் என்பது முக்கியம் அன்று. அதில் எத்தனை நூல்களை உள்வாங்கினாய் என்பதே முக்கியம் என்பதனை போல தங்களின் இருநூல்களை படித்து இரண்டு நூல்களையும் உள்வாங்கி மனம் நிறைவடைந்ததை என்னால் உணர முடிந்தது. தங்களின் ஹைக்கூ உலா என்னை இவ்வாறு மாற்றியது.

வீதிகள் தோறும் 

வாசகர் கூட்டம்

ஹைக்கூ உலா..!

சிவிகையில் சிறந்த

பயணம்

ஹைக்கூ உலா...!

ஹைக்கூ உலா

உற்ச்சவர்

கவிஞர் இரா.இரவி..!

பார் முழுவதும்

பவனி

ஹைக்கூ உலா..!

வாசகரும்

கவிஞர் ஆகலாம்

ஹைக்கூ உலா..!

இது போன்று நூலினை வாசிக்கும் வாசகரையும்  கவிஞராக மாற்றும் வல்லமை படைத்தவர் கவிஞர் இரா .இரவி என்பது இந்நூலில் இருந்து நான் கண்ட உண்மை ஆகும்.

கவிஞர் இரா .இரவியின்  படைப்புகள் அனைத்தயும் படிக்க வேண்டும் என்பதே இதன் மூலம் நான் கொண்ட ஆவா.

🙏🏻🙏🏻

கருத்துகள்