கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு அமெரிக்க எருமை கூட அம்மா என்றழைக்கிறது தமிழர்தம் பிள்ளைகளோ தாயை மம்மி என்கின்றது!
கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு
தமிழர்தம் பிள்ளைகளோ தாயை மம்மி என்கின்றது!
கவிஞர் இரா. இரவி.
******
மம்மி என்பதன் பொருள் செத்தப்பிணம்
மடத்தனமாக மம்மி என்று அழைப்பது முறையோ?
தமிழனின் வீட்டில் தமிழ் தான் இல்லை
தமிழ்நாட்டில் வந்தது தமிங்கிலத்தால் தொல்லை!
ஐந்தறிவு மாடு கூட அம்மா என்கிறது
ஆறறிவு மனிதன் மம்மி என்பது சரியோ?
பிரமிடுகளில் புதைக்கப்பட்ட பிணமே மம்மி
பொருள் புரியாமல் மம்மி என்பது முறையோ?
பெரும்பாலான வீடுகளில் மம்மி என்றே ஒலிக்கிறது
பண்பாட்டை மறந்து சீரழிந்து தவிக்கின்றது!
அம்மா என்ற அழகான சொல் இருக்கையில்
அந்நிய மொழியில் மம்மி என்பது மடமை!
ஆங்கிலேயரை விரட்டினோம் ஆங்கிலத்தை விரட்டவில்லை
ஆங்கிலோ இந்தியன் போல தமிழனும் மம்மி என்கிறான்!
மம்மி ஏன்று அழைப்பது பெருமையல்ல் சிறுமை
மம்மி என்பதை அம்மி என்றழைக்குது குழந்தை!
உயிரெழுத்து மெய்யெழுத்து உயிர்மெய் எழுத்து
ஒப்பற்ற மூன்றெழுத்தின் கூட்டு அம்மா!
உனக்கு உயிர் தந்த ஒப்பற்ற உறவை
உனது தாய்மொழியால் அழைப்பதே பெருமை!
பணக்காரன் முதல் பாமரன் வரை தமிழகத்தில்
பலர் மம்மி என்று அழைக்க வற்புறுத்துகின்றனர் !
ஆங்கிலேயன் எவனாவது அம்மா என்று அழைப்பானா?
ஆங்கில மோகம் விட்டால் தான் விடியும் உன் வாழ்க்கை!
மம்மி என்ற சொல்லிற்கு முடிவு கட்டுவோம்
மண்ணில் தமிழ் மண்ணில் அம்மா என்றே அழைப்போம்!
உலகின் முதல்மொழியின் ஒப்பற்ற சொல் அம்மா
உதடுகள் இனி அம்மா என்றே உச்சரிக்க வேண்டும்!
மம்மி என்று அம்மா செத்தபின்னே அழையுங்கள்
அம்மா என்றே உயிருடன் இருக்கையில் அழையுங்கள்!
.
கருத்துகள்
கருத்துரையிடுக