கவியமுதம்.! நூல்ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : இர. ஜெயப்பிரியங்கா !




கவியமுதம்.!

நூல்ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !

நூல் விமர்சனம் : இர. ஜெயப்பிரியங்கா !

நூல் வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை-600 017. பக்கம்:172 விலை:100

                கவிஞர் இரா. இரவி அய்யா அவர்கள் எனக்கு குரு. அவர்
2015-ல் தினமலர் நாளிதழில் எழுதிய கவிதை எழுதுவோம் என்னும் கட்டுரையே முதன்முதலாக என்னை கவிதை எழுத ஊக்கப்படுத்தியது. அய்யா அவர்களின் 14-வது நூல் கவியமுதம். இந்நூல் எனக்கு வரலாற்று சிறப்புமிக்க மதுரை தியாகராசர் கல்லுரியில். கல்லூரிகளுக்கு இடையே நடந்த கலைத்தந்தையார் நினைவுநாள் கட்டுரை போட்டியில் பரிசாக கிடைத்தது. அய்யா அவர்களின் படைப்புகளில் முதன்முதலாக நான் வாசித்த நூல் இக்கவியமுதம்.  நூலின் முன் அட்டைப்படத்தில் மடிக்கணினியுடன் கூடிய வள்ளுவரின் படமும்.

கவிஞரின் படமும் இடம் பெற்றுள்ளது. பின் அட்டைப்படத்தில் கவிஞரை பற்றி இம்மண்ணுலகை விட்டு மறைந்த தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா. மோகன். முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப அவர்களின் வாழ்த்துரையும், கவிஞர் எழுத்தோலை விருது பெறும்போது எடுத்துகொண்ட புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. நூலுக்கு அணிந்துரை அளிக்கும் இரு சான்றோர்கள் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களும் தமிழ்த்தேனீ போரசிரியர் இரா. மோகன்  அவர்களும் ஆவர். இனி கவியமுதத்தை பருக செல்வோம்!

                ‘உலகில் முடியாது என்பது எதுவும் கிடையாது’ என்பதை நூல்

                முடியாது என்று முடங்காதே
                முடியும் என்றே முயன்றிடு!
                நாளையென்று நாட்களைத் தள்ளாதே!
                நாளை என்ன? இன்றே முடித்திடு!
                பேசிடக் கூச்சம் கொள்ளாதே!
                பேசி நன்மைகளைப் பெற்றிடு!
                உன் வாழ்க்கை உந்தன் கையில் உள்ளது
                விண்ணில் அல்ல மண்ணில் உள்ளது சொர்க்கம்!

                நம்பிக்கை நாற்று’க்களாக நூல்

                வெற்றி சில நிமிடங்களில் கிட்டிட
                வாழ்க்கை திரைப்படம் அன்று!
                பயிற்சி செய்! முயற்சி செய்!
                தோல்வி கிடைத்தால் - அதன்
                காரணத்தை ஆராய்ந்தால்
                அடுத்த போட்டியில்
                அதனைத் தவிர்த்திடு!
                வெற்றி வசமாகும்!
                வாழ்க்கை வசந்தமாகும்!    ....    என்கின்றது.

‘உலக மொழிகளின் மூலம் தமிழ்மொழி’ என்பதை நூல்

இலக்கண இலக்கியங்களின் குவியல் தமிழ்மொழி
இணையத்தில் கொடிகட்டிப் பறக்கும் தமிழ்மொழி
புலவர்கள் பலரை உருவாக்கிய தமிழ்மொழி
அறிஞர்கள் பலரைச் செதுக்கிய தமிழ்மொழி
கவிஞர்கள் கட்டிக் காத்த கரும்பு தமிழ்மொழி!

என்று நுhல் நம்மொழியின் பெருமையை முன்வைக்கின்றது.      

உலக பொதுமறை’யாக விளங்கும் திருக்குறள் பற்றி நூல்

                தமிழ் இலக்கியத்தின் மணிமகுடம் திருக்குறள்
                தனிபெரும் இடம்பெற்ற இலக்கியம் திருக்குறள்
                தமிழ் என்ற சொல்லே இடம்பெறாத திருக்குறள்
                காந்தியடிகளின் குரு டால்ஸ்டாய் என்ற அறிஞர்
                டால்ஸ்டாயின் குரு செந்நாப்புலவராம் திருவள்ளுவர்
                சொக்க வைக்கும் சொற்களின் சுரங்கம் திருக்குறள்
                சோகத்தை மறக்க வைக்கும் சுகம் திருக்குறள்!

பகுத்தறிவு பகலவன் பெரியார் பற்றி நூல்

                அறியாமை இருளை அகற்றிய அறிவுச் சூரியன்!
                அறிந்ததை அகிலத்திற்கு உரக்கச் சொன்னவர்!
                பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்தவர்!
                பெண் போகப் பொருள் அல்ல என விளக்கியவர்!
                தந்தை பெரியார்; அவர் மட்டும் பெரியார்!
                தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார்?

என்று  நூல் பெரியாரின் உயரிய கொள்கைகளை முன்வைக்கின்றது.

படிக்காத மேதை கல்வி கண் திறந்த கர்மவீரர் ‘காமராசர்’ பற்றி  நூல்.

                கற்றோரின் எண்ணிக்கையைப் பன்மடங்கு உயர்த்தியவர்;
                கல்விச்சோலைகள் திறப்பதைத் தலையாய கடமையாகச்
                செய்தவர்!
                கல்வி வள்ளல் பட்டத்திற்கு பொருத்தமான ஒரே மனிதர்!
                கோடிக்களைச் சுருட்டுவோருக்கு இன்று கல்வி வள்ளல் பட்டம்!
               எட்டாக் கனியாக இருந்த கல்வியை எட்டும் கனியாக்கியவர்!        
               கற்றோர் போற்றும் காமராசர் கல்வி நேசர்!

                உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் காதல் உணர்வு உண்டு நூலும் காதல் கவிகளாக

                மறந்து விட்டேன் அவளை என்று    
                உதடுகள் உச்சரித்தாலும்
                மூளையின் ஒரு மூலையில்
                அவள் நிரந்தரமாக!
                ஒரே ஒரு புன்னகை செய்தாள்
                ஓராயிரம் சக்தி என்னுள் பிறந்தது!

என்று நூல் காதல் கவிதைகளை முன்வைக்கின்றது.

                உலகில் உள்ள அனைத்து உயிர்களும் தோன்றக் காரணம் அன்னை என்பதை நூல்

பத்து மாதங்கள் சுமந்து பெற்றவள் அன்னை
பத்துப் போட்டு வளா;த்து எடுத்தவள் உன்னை!                                                
உறவுகளின் ஒப்பற்ற சிகரம் அன்னை!
உலகம் போற்றிட வளர்த்தாள் உன்னை!
வேதனை, சோதனை ஏற்றாள் அன்னை!
வேண்டி விரும்பிப் பெற்றாள் உன்னை!

                அன்னைக்கு இணையான உறவு உலகில் இல்லை!----என்று நூல் அன்னையின் பெருமைகளை எடுத்துரைக்கின்றது.

                இன்றைய காலக்கட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடு மிகுந்துள்ளது. சுற்றுச்சுழல் விழிப்புணர்வாக நூல்

                கண்ட இடங்களில் குப்பை கொட்டாதிருப்போம்!
                கண்ட இடங்களில் குப்பை போட்டால்!
                தண்டத் தொகை வசூலிக்க வழி செய்வோம்!
                பாலீத்தின் பைகளுக்கு முடிவு கட்டுவோம்!
                துணிப்பை கொண்டு செல்வதை வழக்கமாக்கிடுவோம்!

என்று  நூல் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை முன்வைக்கின்றது.

                ‘சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை’ குறித்து  நூல்

                ஈடு இணையற்ற எங்கள் மதுரை!
                திருமலை மன்னர் அரண்மனை உள்ள மதுரை!
                திரும்பிய பக்கமெல்லாம் கோயில் உள்ள மதுரை!
                சதுரம் சதுரம் வடிவமைத்த மதுரை!
                பட்டிமன்ற நடுவர்களைத் தந்த மதுரை!
                மண் மணக்கும் சிறந்த ஊர் மதுரை!
                சங்கம் வைத்துத் தமிழ் வளர்க்கும் மதுரை!
                ஈடு இணையற்ற எங்கள் மதுரை!
                நாடு போற்றும் நல்ல மதுரை!

                ‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்பதை நூல்

                எலும்பில்லா எறும்பு கூடச் சேமிக்கின்றது!
                இன்றைய சேமிப்பு நாளைய  பூரிப்பு!
                சிக்கனமாக இருந்தால் தினமும் சேமிக்கலாம்                                                
                மெத்தனமாக இருந்தால் துன்பமே மிஞ்சும்
                வருங்காலம் வளமாகச் சேமிக்கப் பழகு!
                வருத்தமின்றி வாழ்ந்திட சேமிக்கப் பழகு!

                ‘ஓய்வுக்கு ஓய்வு தந்து உழைத்திட வேண்டும்’ என்பதை நூல்

                பணி ஓய்வு ஊதியம் பெறும் பணிக்குத்தான்
                ஓய்வு என்றுமில்லை படைப்பாற்றல் பணிக்கு!
                மூச்சு உள்ளவரை ஓய்வின்றி
                உழைப்பதே மனிதனுக்கு அழகு!
                உடலுக்கு ஓய்வு சிறிது தேவை!
                சிந்தைக்கு ஓய்வு தேவை இல்லை!

                ‘புத்தகம் மனகவலை நீங்கும் மருந்து’ என்று நூல் எடுத்துரைக்-கின்றது.

                அகம் புதிதாக உதவுவது புத்தகம்!
                அகிலம் அறிந்திட உதவுவது புத்தகம்!
                படிக்கப் படிக்கப் உயா;ந்த்திடும் புத்தகம்!
                படிக்கல்லாக இருந்து உயா;த்திடும் புத்தகம்!
                கறக்கக் கறக்கப் பால் தருமாம் காமதேனு!
                தினமும் சில மணி நேரம் படியுங்கள் புத்தகம்!
                தவமாக வாசியுங்கள் தினமும் புத்தகம்!

என்று நூல் புத்தகத்தின் மேன்மையை எடுத்துரைக்கின்றது. நூலின் பின்இணைப்பாக தினமலர் நாளிதழிலில் வெளிவந்த கவிஞரின் நேர்முகமும் கவிஞரின் சுயவிபரமும் கொடுக்கப்பட்டுள்ளது.  அய்யா அவர்கள் மதுரை விமான நிலையத்தில் உதவி சுற்றுலா துறை அலுவலராக பணியாற்றிக் கொண்டே தம் இலக்கிய பணியையும் ஆற்றி வருகின்றார்.

ஹைகூ திலகம், மதிப்புறு முனைவர், கவியருவி, கவிமுரசு பட்டங்களை பெற்றவர். இவரது நேர்காணல்கள் பொதிகை, ஜெயா, கலைஞர் முதலான தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி உள்ளன. இவரது கவிதைகள் பல்வேறு கல்லூரிகளில் பாடப்பகுதிகளாக வைக்கப்பட்டுள்ளன. பல இலட்சம் வாசகர்கள் பார்த்த   www.kavimalar.com
.உள்ளிட்ட இணையங்களின் ஆசிரியராக இருந்து கவிதை, கட்டுரை  நூல் விமர்சனங்கள் எழுதி வருகிறார். உலகின் புகழ் பெற்ற தமிழ் இணையங்களில் இவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளது. தமிழ்த்தேனீ இரா.மோகன் தொகுத்து சாகித்திய அகாதெமி வெளியிட்ட தமிழ் ஹைகூ ஆயிரம் நூலில் இவரது 10 ஹைகூ கவிதைகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அய்யா அவர்களின் கவிதைச்சாரலில் தொடங்கிய கவிபயணம் இன்று இருபதாவது நூலான இறையன்பு கருவுலத்தை தொட்டுவிட்டது. ’கவிதை உறவு’ மாநில அளவில் நடத்திய சிறந்த  நூல்களுக்கான போட்டியில் அய்யா அவர்களின் கவியமுதம் நூலிற்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது என்பது மகிழ்வான தகவல். ‘கவி’அமுதம் கவிஞரின் பன்முகபார்வைக் கொண்ட செம்மை பொருந்திய இனிய நூல்.j

கருத்துகள்