இனிமேல் மழைக்காலம்! கவிஞர் இரா. இரவி.

இனிமேல் மழைக்காலம்!  கவிஞர் இரா. இரவி.

இனிமேல் மழைக்காலம் வந்தால் நாம்
இனிதே மழைநீரை சேமித்து வைப்போம்!

வானிலிருந்து வழிந்திடும் அமுதம் மழை
வரவேற்போம் வந்ததும் வீணாகாது சேமிப்போம்!

பணத்தை சேமித்து வைப்பது போலவே
பயன்தரும் மழையை சேமித்து வைப்போம்!

கடலில் கலக்க விடாமல் தடுத்திடுவோம்
குளம் ஏரியாவையும் தூர் வாரிடுவோம்!

வரும்போது ஊர் வழியே சென்று விட்டு
அறுக்கும்போது அரிவாளோடு வருவதை நிறுத்து

மழை பொழியும் போது சேமித்திடுவோம்!
மழைநீர் உயிர்நீர் என்பதை உணர்ந்திடுவோம்!

மழைக்காலத்தில் குடை பிடிப்பதை விடுத்து
மழையில் நனைந்து மகிழ்ந்திடுவோம் எல்லோரும்!

மழையில் நனைந்தால் சளி பிடிக்கும் என்பது
மூட நம்பிக்கை நனைந்து மகிழ்ந்து வாழ்ந்திடுவோம்!

கருத்துகள்