துபாய் : துபாயில் மதுரைக் கவிஞரும், மதுரை விமான நிலைய உதவி சுற்றுலா அதிகாரியுமான இரா. இரவி எழுதிய இறையன்பு கருவூலம் நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் அஜ்மான் அல் ஹிரா மருத்துவ நிலையத்தின் தலைவர் டாக்டர் காசிம் இல்யாஸ் அறிமுகம் செய்து வெளியிட நூலின் பிரதியை மன்னார்குடி முஜீப் பெற்றுக் கொண்டார். அப்போது பேசிய இல்யாஸ், கவிஞர் இரா. இரவியின் ஆழ்ந்த ஆய்வு இறையன்பு அவர்களின் நூல்கள் குறித்த விபரங்களை தெளிவாக தெரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், பார்மசிஸ்ட் கனி, அஜீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக