மும்மொழியால் தமிழ் அழிக்கும் திட்டம்! கவிஞர் இரா. இரவி.
மும்மொழியால் தமிழ் அழிக்கும் திட்டம்!
கவிஞர் இரா. இரவி.
******
இரண்டு மொழி படிப்பதற்கே மாணவர்கள்
இங்கு இன்னல் படும்போது எதற்கு மூன்றாம் மொழி!

திட்டமிட்டு தமிழை அழிக்க ஏற்பாடு
தெரியாத இந்தி மொழி தமிழுக்கு எதற்கு?

இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்கிறார்கள்
இந்தி தெரிந்தவன் வேலை கேட்டு இங்கு வருகிறான்!

தெருவில் பானிபூரி விற்று வருகிறான்
தெற்கு தான் அவனுக்கும் வாழ்வு தந்துள்ளது!

வடக்கே வாழும் சிலரின் நன்மைக்காக
வடக்கு அல்லாது தெற்கில் வாழ்வோருக்கு எதற்கு இந்தி!

புரியாத மொழியை கட்டாயப்படுத்துவது
புத்தி பேதலிப்பைத் தந்துவிடும் அறிந்திடுக!

உலகின் முதல்மொழியை உருக்குலைய விடலாமா?
ஒப்பற்ற தமிழுக்கு இன்னல் தான் தரலாமா?

பன்னாட்டு மொழியாக விளங்குவது தமிழ்மொழி
பைந்தமிழுக்கு இணையான மொழி இல்லை உலகில்!

விருப்பம் உள்ளவர்கள் யாரும் எப்போதும்
வித்தியாசாலைகளில் இந்தி கற்பதைத் தடுக்கவில்லை!

ஏழை நடுத்தர மக்களிடம் கட்டாயப்படுத்தி
இந்தியைத் திணிப்பது மந்தியின் செயலாகும்!

இருமொழிக் கொள்கையே என்றும் தொடருமென்று
இனியவர் நேரு தந்த உறுதிமொழி என்னாச்சு!

தமிங்கிலப் பேச்சால் தமிழ் சிதைந்து வருகின்றது
திணித்தால் இந்தி மீது வெறுப்பே வரும் எங்களுக்கு!

கருத்துகள்