இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் திப்புரை : முனைவர் ஜெ.. ரஞ்சனி ! தமிழ்த்துறைத் தலைவர், எஸ்.ஆர்.எஸ். கலை அறிவியல் கல்லூரி, இருங்களூர், திருச்சி.




இறையன்பு கருவூலம் !

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !

நூல் திப்புரை : முனைவர் ஜெ.. ரஞ்சனி !
தமிழ்த்துறைத் தலைவர், எஸ்.ஆர்.எஸ். கலை அறிவியல் கல்லூரி, இருங்களூர், திருச்சி.

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர்,
சென்னை-600 017. பக்கங்கள் : 152, விலை : ரூ.110.

*******

தமிழக அரசு சுற்றுலாத் துறையில் உதவி சுற்றுலா அலுவலராக உள்ள கவிஞர் இரா. இரவியின் இருபதாவது படைப்பாக இந்நூல் பரிணமளிக்கின்றது. முதுமுனைவர் இறையன்பு அவர்களின் 16 நூல்களுக்கு கவிஞர் இரா. இரவி இந்நூலில் மதிப்புரை வழங்கியுள்ளார். இரா. இரவியின் கருத்தாழம் மிக்க மதிப்புரை நாம் இறையன்புவின் நூல்களை வாசிக்க ஆவலைத் தூண்டுகின்றது.

சிறந்த படிப்பாளி தான் படைப்பாளியை இனம் காண முடியும். இந்த இரண்டும் கைவரப் பெற்ற பெருந்தகையாளர் கவிஞர் இரா. இரவி என்றால் அது மிகையல்ல.

இளைஞர்களுக்கு எழுச்சியூட்டும் இறையன்புவின் உரைகளை அடையாளம் காண வைத்த பெருமை கவிஞர் இரா. இரவியைச் சாரும்.

கவிஞர் இரா. இரவியின் ஹைக்கூ கவிதைகளுக்கு முதுமுனைவர் வெ. இறையன்புவின் மதிப்புரை சிறப்பானதாகும். இறையன்பு கவிஞர் இரா. இரவியை புலிப்பால் இரவி என்று அழைப்பது சாலப் பொருந்தும்.

சுற்றுலாத் துறையில் இருந்து கொண்டே பல நூல்களை வாசிப்பதும், எழுதுவதும் என்று தன்னை இலக்கிய உலகில் அர்ப்பணித்துக் கொண்டவர் கவிஞர் இரா. இரவி என்பதில் ஐயமில்லை.

கருத்துகள்