இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி மேலூர்

இறையன்பு கருவூலம் !

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !

நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி மேலூர்  

வெளியீடு : 
வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.  பக்கங்கள் : 152, விலை : ரூ.110.
*******
     மதிப்பிற்குரிய கவிஞர் இரா.இரவி அவர்களின் ‘இறையன்பு கருவூலம் என்ற நூலைப் பார்த்தவுடனே பரவசம் ஒட்டிக் கொண்டி விட்டது. அதில் கவிஞர் ‘மதிப்புரைக்காக என்ற வார்த்தையை இணைத்து அனுப்பி இருந்தாலும், நான் மிக மிக மதிப்பு வைத்திருக்கும் ஆளுமையான வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களைப் பற்றிய நூல் என்பதால் மதிப்புரை எழுதுவதில் அக்கரை செலுத்த முடியவில்லை.  மதிப்பிற்குரிய எழுத்தாளரும் இந்திய ஆட்சிப் பணியில் அங்கம் வகிப்பவருமான வெ. இறையன்பு அவர்கள்.

     பெயரே மந்திரம்! முகமோ கோபுரம்! என எண்ணுபவள் நான்.  அப்படியிருக்க நூலுக்கு மதிப்புரை எழுதுவதென்பது மலையின் பெருமையை கூழாங்கல் பேசுவது போலிருக்கும்.

     இருப்பினும் எனது வார்த்தைகளுக்காக எப்போதுமே மதிப்பளித்து நூலினைத் தவறாமல் அனுப்பும் கவிஞர் இரா. இரவி அவர்களுக்காக ஒரே வரியில் கூறுகிறேன்.
இறையன்புவின் நூலிலே தனக்குப் பொன்னாடை நெய்து கொண்டு விட்டார் கவிஞர் இரா. இரவி அவர்கள்.

     பொன்னாடை அணிந்தவர்களை உலகம் சீக்கிரத்தில் அடையாளம் கண்டு அவர்களை சிந்தையில் பச்சை குத்திக் கொள்ளும் என்பதில் ஐயமில்லை.

     மதிப்பிற்குரிய வெ. இறையன்பு அவர்களின் நூலுக்கு எவருமே விலை தர முடியாது. அச்சுக்கும் தாளுக்கும் தான் என்பது நூறு சதவீத உண்மை. வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் எழுத்தாளர் மட்டுமல்ல, பன்முகம் கொண்டவர் என்பதால் அவரின் ஆற்றலை கண்டு எள்ளைப் போன்றோர் வியப்புக் குறியீடை மட்டுமே வெளிப்படுத்த இயலும்.

         இரா. இரவி + இரா. மோகன் + இறையன்பு D போல் 3 இ என்றே பெயர் சூட்டலாம். அத்தனை பொருத்தாமாயுள்ளது.

                இறையன்பு இ.ஆ.ப. அவர்களைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு இந்நூல் வரம்.

     இந்நூலில் கவிஞர் இரா. இரவி அவர்களுக்கும் மதிப்பிற்குரிய வெ. இறையன்பு அவர்களுக்கும் உள்ள அன்பையும், இடையிடையே தன் வரலாற்றுக் குறிப்புகள் மூலம் வாசகர்களின் நினைவுகளையும் எழுப்பி வெற்றி பெற்றிருக்கிறார் இரா. இரவி அவர்கள்.

     கவிஞர் இரா. இரவி அவர்கள்,
     அறிமுகக் கவிஞர்களையும் நேசிப்பார்!
     அரியணைக் கவிஞர்களையும் நேசிப்பார்!

எவரையும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் நடத்துவது எல்லோருக்கும் அமைந்து விடாத ஒன்று.  ஆனால் கவிஞர் அவர்கள் அதை வரமாக வாங்கி வைத்துக் கொண்டார் போலும்...
     அகரத்தை மறக்காத கவிஞர் இரா. இரவி அவர்கள் சிகரத்தைத் தொட என் அன்பு வாழ்த்துக்கள்!

கருத்துகள்