சுய தரிசனம் ! கவிஞர் இரா .இரவி !





சுய தரிசனம் !       கவிஞர் இரா .இரவி  !

உங்களைப்  பற்றிய எண்ணம் எப்போதும்
உங்களிடம் உயர்வாகவே இருக்கட்டும் !

தாழ்வு மனப்பான்மை இருந்தால் உடன்
தகர்த்து எறிந்து தன்னம்பிக்கைப் பெறுங்கள் !

பலவீனம் எதுவும் இருந்தால் நீக்கிடுங்கள்
பலம் பெற முயற்சிகள் செய்யுங்கள் !

கெட்ட பழக்கம் ஏதேனும் இருந்தால்
கெட்ட கனவாக நினைத்து மறந்திடுங்கள் !

திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்
தன்னை நம்பும் வளமையைப்  பெறுங்கள் !

உங்களை நீங்களே எடைப் போட்டுப் பாருங்கள்
உங்கள் எடை குறைவென்றால் உயர்த்துங்கள் !

முடியாது   நடக்காது தெரியாது என்பதற்கு
முற்றுப்புள்ளி உடன் வைத்து முயலுங்கள் ! 
.
என்னால் முடியும் மற்றவரால் முடிவது
என்றே முயன்று சாதனை நிகழ்த்துங்கள் !

கருத்துகள்