சித்திரம் பேசுதடி ! கவிஞர் இரா .இரவி !




சித்திரம் பேசுதடி ! கவிஞர் இரா .இரவி !

சித்திரம்  போன்ற அவள் பேசினாள்
சித்திரம் பேசுதடி பாடல் வந்தது !

சித்திரமும்  பேசும் உற்று கவனித்தால்
சித்திரம் வரைந்தவரின் உணர்வினைக் கூறும் !

கருத்து எதுவும் எழுதாத சித்திரம் கூட
கருத்துக்கள் பல கூறும்  விந்தை உண்டு !

ஓவியரின் வரையும் ஆற்றலைப் பார்த்தவுடன்
ஓவியம் நமக்குப் பறை சாற்றி விடும் !

மோனாலிசா ஓவியம் இன்றும் பேசுகின்றது
மோகனைப் புன்னகை எப்போதும் வீசுகின்றது !

உதடுகள் அசைத்து அவள் பேசுவது
ஓவியம் பேசுவது போலவே இருக்கும் !

எல்லோரா ஓவியத்தை சென்று பாருங்கள்
எல்லோருடனும் எப்போதும் பேசுவது உண்மை !

சித்தன்னவாசல் சென்று  பாருங்கள் நம்மோடு
சித்திரங்கள் மனதோடு பேசுவதை அறியலாம் !
.

-- 

கருத்துகள்