தாலாட்டு!
கவிஞர் இரா. இரவி
வழக்கொழிந்து விட்டது வீடுகளில் தாலாட்டு
வாய் விட்டு பாடிட வந்தது தயக்கம்!
தாலாட்டின் சிறப்பை அறியவில்லை இன்று
தாலாட்டில் அறிவு புகட்டினர் அன்று!
மாமன் அடித்,தானோ மல்லிகைப்பூ செண்டாலே ?
மாமனையும் மல்லிகையையும் அறிமுகம் செய்தனர்!
தாய்மொழியை தொட்டிலிலேயே கற்பித்தனர்
தாயின் அறிவை சேயுக்கு போதித்தனர்!!
தாலாட்டில் கதையும் சொல்லி வந்தனர்
தொட்டிலை முதல் வகுப்பறையாக்கி மகிழ்ந்தனர்!
தாய்மார்களே தாலாட்டை உடன் பழகுங்கள்
தாயின் கடமை என்பதை உடன் உணருங்கள்!
கருத்துகள்
கருத்துரையிடுக