இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : முனைவர் ,கவிஞர் ,.ஞா. சந்திரன் !








இறையன்பு கருவூலம் !


நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !



நூல் மதிப்புரை : முனைவர் ,கவிஞர் ,.ஞா. சந்திரன் !

தன்னம்பிக்கை உரையாளர்
முதுநிலைத்  தமிழாசிரியர்

புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி
மதுரை .625001



வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.  பக்கங்கள் : 152, விலை : ரூ.110.


*******

‘மாமனிதருக்கு மகுடம்’



      கையடக்க அலைபேசியில் உலகமே அடங்கி விடுவது போல நண்பர் இரா. இரவி அவர்களீன் ‘இறையன்பு கருவூலம்’ நூலில் உலகளாவிய கருத்துக்கள் அடங்கியிருக்கின்றன.  அன்பிற்குரிய மனிதநேய மாமனிதர் முனைவர் வெ. இறையன்பு அவர்களின் நூல்களுக்கு எழுதிய மதிப்புரைகள், திரு. வெ. இறையன்பு அவர்கள் ஆற்றிய உரைகள், இவரின் ஆளுமைத் திறன், இரவி அவர்களின் நூல்களுக்கு இறையன்பு அவர்கள் எழுதிய அணிந்துரைகள் ஆகியவற்றை நுணுக்கமாக சிற்பத்தை வடிப்பது போன்று இந்நூலினைத் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நூலின் மூலம் இரவி அவர்கள் முனைவர் வெ. இறையன்பு அவர்கள் மீது கொண்டுள்ள அன்பு வெளிப்படுகின்றது.



      மேதகு அப்துல்கலாம் அவர்களைப் போலவே இளைஞர்கள் மீதும் சமுதாயத்தின் மீதும் அதிக அன்பும் அக்கறையும் கொண்டவர் நமது முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள்.

      தனது பணிச்சுமைகள் மத்தியிலும் இளைஞர்களின் வளர்ச்சிக்காகப் பல படைப்புகளை நூல்களாக வெளியிட்டும் தகவல் தொடர்பு சாதனங்கள் வழியாக தமது கருத்துக்களைப் பகிர்ந்தும் வருகின்றார். இவரின் ஒட்டுமொத்த படைப்புகளில் உள்ள கருத்துக்களை அறிய இரவி அவர்களின் இந்நூல் ஒன்றே போதும். இந்நூலைப் படித்தால் இறையன்பு அவர்களின் அனைத்து நூல்களையும் தேடித்தேடி வாசிக்கத் தோன்றும்.



      இறையன்பு கருவூலம் இதயத்திலிருந்து வாசிக்க வேண்டிய நூல் மட்டுமன்று. வாழ்நாள் முழுவதும் வழித்துணையாகவும் எடுத்துச் செல்ல வேண்டிய நூலாகும்.



      மேடைப் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் ... என அனைவருக்கும் எளிதில் கிடைத்த புதையல் ‘இறையன்பு கருவூலம்’.



      இந்நூலுக்கு முனைவர் இரா. மோகன், கலைமாமணி கு. ஞானசம்பந்தன் ஆகியோரின் மதிப்புரை ஒரு சொட்டுத் தேனாய் தித்திக்கிறது.



      இரவி, நான் உட்பட எத்தனையோ எழுத்தாளர்களுக்கு இளம்படைப்பாளர்களுக்கு நேசத்திற்குரிய மனிதநேயர். வெ. இறையன்பு அவர்கள் ஊக்குவிப்பாகவும் வழிகாட்டியாகவும் இன்றளவும் இருந்து வருகின்றார். இந்த மாமனிதர் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்வது எங்களுக்கும் மிகப்பெரிய் வரமாகும்.



      ‘இறையன்பு கருவூலத்தை’ நமக்கு புதையலாகத் தந்த இரவி அவர்களை மனதார வாழ்த்துகிறேன், வணங்குகின்றேன், அவரின் தமிழ்ப்பணி தொடரட்டும் நம் இதய சிம்மாசனத்தில் என்றும் அமரட்டும் ...





.

கருத்துகள்

கருத்துரையிடுக