கவிஞர் இரா. இரவி இன்போ. அம்பிகா








கவிஞர் இரா. இரவி
இன்போ. அம்பிகா


ஹைக்கூ கவிதைகளில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளவர் கவிஞர் இரா. இரவி.
காண்பதற்கு எளியவர், எனினும் நிரம்ப திறமை வாய்ந்தவர். ரத்தின சுருக்க கவிதை வழி தன் கருத்தை பதிகிறவர். நூல் பல வெளியிட்டுள்ள இவர் அப்துல் கலாமினால் பாராட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தன் நூல் வழி தன் மேலோங்கிய கருத்துக்களை இவ்விதம் சொல்கிறார். ஆயிரம் ஹைக்கூ கவிதைகளை தாண்டி எழுதியுள்ள இரவி, முற்போக்கு சிந்தனையுடைய கருத்துகளையும் முன்வைக்கிறார்.
அற்புத ஆற்றல் வாய்ந்த இரவி அவர்களின் பணி சிறப்புக்குரியது.
நதி நடந்ததால்
      பளபளப்பானது
      கூழாங்கல்.
      கைரேகையில் இல்லை
            கைகளில் உள்ளது
            எதிர்காலம்
வசப்படுவதில்லை
      வாசிக்கும் அனைவருக்கும்
      புல்லாங்குழல்.
      இருபது நூல்கள்
            என்பது பெரிய
            சாதனையே!
இவரது தமிழ்ப்பணி பாராட்டுக்குரியது.  கவிஞர், சமூக ஆர்வலர், சுற்றுச்சூழல் ஆர்வலர் என பன்முக திறனாளி. ரத்தின சுருக்கத்தை நீட்டி பெருங்கவிகளும் புனைகிறார். தன் சமூக நல் எண்ணங்களை சொல்கிறார்.
நிகழ்பவை, காண்பவை எல்லாவற்றையும் ஹைக்கூவாக மாற்ற முயற்சித்து அதை செய்தும் வருகிறார்.
இவரது அரும்பணி தொடர மற்றும் மேலும் இன்னும் நூல்கள் பல எழுத வாழ்த்துக்களோடு ...
என்றும் அன்புடன்
இன்போ. அம்பிகா

கருத்துகள்