ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



ஹைக்கூ !  கவிஞர் இரா .இரவி !

மரத்திலிருந்து விழுந்த இலை
பயணித்தது படகாக
குளத்தில் !

நினைத்தது ஒன்று
நடந்தது மற்றொன்று
தேர்தல் முடிவு !

தெரியவில்லை பிச்சைக்காரனுக்கு 
கையில் உள்ளது 
தங்கத்தாலான திருவோடு !
புதையலுக்கு
மேல் அமர்ந்து
எடுக்கிறான் பிச்சை !

பிறந்தநாள் கொண்டாட்டங்கள்
முடிகின்றது சண்டையில்
மதுவால் !

தொடர்பு எல்லைக்கு அப்பால்
உள்ளார் என்றது அலைபேசி
அடுத்த அறையில் உள்ளவரை !

பசை இல்லாததால்
பசை  காய்ச்சி ஒட்டுகிறான்
சுவரொட்டி !

கோடிகளில் பணக்காரர்கள்
கோடித்துணி இன்றி ஏழைகள்
வாழ்க்கை முரண் !

இறக்க பல வழி சிந்திப்பவன்
வாழவும் வழி உண்டு
அதனை சிந்தி !

அடைகாத்த  பாசம் உண்டு
குயிலின் மீது
காகத்திற்கு !

அறிவியல் அறிவுரை
வேண்டாம் திருமணம்
நெருங்கிய உறவுகளுக்குள் !

இன்னும் புரியவில்லை 
இளையோருக்கு  
எது காதல் என்று !

கருத்துகள்