ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை : முனைவர் ,கவிஞர் ,.ஞா. சந்திரன் !

ஹைக்கூ 500 ...

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.

நூல் மதிப்புரை : முனைவர் ,கவிஞர் ,.ஞா. சந்திரன் !

தன்னம்பிக்கை உரையாளர்
முதுநிலைத்  தமிழாசிரியர்
புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி
மதுரை .
நூல் வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை-600 017.  பக்கம் : 132, விலை : ரூ. 100            பரபரப்பான பணிகளுக்கு மத்தியில் மனம் மென்மையாக ‘ஹைக்கூ 500’ நூலை எடுத்து ஒருமுறை வாசித்தால் போதும்!

      ஒவ்வொரு ஹைக்கூவும் தேர்ந்தெடுத்த முத்துக்கள்!

      கவிஞரும் நண்பருமான இரவி அவர்கள் ஹைக்கூ மீது கொண்டுள்ள அன்பும், தமிழ் மீது கொண்ட பற்றும் சமுதாயத்தின் மீது கொண்ட அக்கறையும் இந்நூலில் உள்ள ‘ஹைக்கூ 500’ தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

    உடல் ஊனத்தை ஊக்கமாக ...

      “வருந்தவில்லை இழந்தைவைகளுக்கு
      மகிழ்கின்றோம் இருப்பவைகளுக்கு
      இனிக்கின்றது வாழ்க்கை!”

இயற்கையை நேசித்து ...

      “விதைத்தவன் உறங்கினாலும்
      விதைகள் உறங்குவதில்லை
      துளிர்த்து மரமாகும்!”

நமது பாரம்பரியம் மாறாது ...

      இனி எந்தக் கொம்பனாலும்
      முடியாது தடுக்க
      சல்லிக்கட்டு!

காதல் சிலிர்ப்புக்கு ...

      “அவளின் கொலுசொலிக்கு
      ஈடான இசை
      உலகில் இல்லை!”

இயற்கை கைவிட்டாலும் நம்பிக்கை கைவிடவில்லை ...

      “உடைமைகளை இழந்தாலும்
      உயிரை இழக்கவில்லை
      துளிக்கும் நம்பிக்கை!”

‘ஹைக்கூ’ பெரியார் ...

      “சிறந்தது
      வழிபாட்டை விட
      உதவுதல்!”

விவசாயம் ; விவசாயி – வளர வேண்டும் ...

      “அட்சயப் பாத்திரம்
      திருவோடானது
      உழவன் தற்கொலை!”

அன்புக்கு யாவரும் அடிமையே ...

      “பாரங்கள்
      அன்பிற்கு அடிபணியும்
      அற்புதக் காளை!”

ஏழையின் சிரிப்பு ....

“வாழ்வது குடிசையென்றாலும்
      பஞ்சமில்லை
      மகிழ்ச்சிக்கு!”

இப்படியாக ஹைக்கூ ... நூல் முழுவதும் கருத்துகள் காவியமாக விரிவடைகிறது.  ஒவ்வொரு ஹைக்கூவும் தேன்துளியாக இனிக்கின்றது.

‘ஹைக்கூ’ உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார். இளைஞர்களின் இதயத்தில் நீங்கா இடம்பெற்றுள்ளார். ‘ஹைக்கூ’ என்றாலே ‘இரவி’ என்று சொல்லும் அளவிற்கு தடம் பதித்துள்ளார். இவரது தமிழ்ப்பணி மேலும் மேலும் வளர் வாழ்த்துகிறேன்!

கருத்துகள்