தந்தி தொலைக்காட்சியில் 2.6.2019 ஒளிபரப்பான "பயணங்கள் முடிவதில்லை நிகழ்ச்சி பற்றி . கவிஞர் இரா .இரவி

தந்தி தொலைக்காட்சியில் 2.6.2019 ஒளிபரப்பான "பயணங்கள் முடிவதில்லை நிகழ்ச்சி பற்றி . கவிஞர் இரா .இரவி  

கூடுதல் தலைமைச் செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப.அவர்களின் அறிவார்ந்த "பயணங்கள் முடிவதில்லை " உரை கேட்டேன்.
இணையத்தில் பார்த்த ஒன்றை  சொன்னார்கள் .கடவுளிடம் ஒருவன் கேள்வி கேட்டானாம்." மனிதர்களை நீங்கள் பார்த்து வியந்த ஒன்று என்ன என்று ?" அதற்கு கடவுள் சொன்னாராம் " இளமையில் உடல் நலம் பற்றி கவனம் செலுத்தாமல் பணம் பணம் என்று அழைக்கின்றனர் .முதுமையில் உடல் நலம் கெட்டு  பணம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை காப்பாற்றுங்கள் என்று அலைகின்றனர்." என்றாராம் .கற்பனையாக இருந்தாலும் உண்மையான கூற்று என்பதை உணர முடிந்தது .

பயணம் பற்றி பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளதையும் குறிப்பிட்டார்கள் .ஒரு கதை ஒன்று சொன்னார்கள் .ஒரு குழு பயணம் ஆனார்கள் .பாதியிலேயே ஒருவன் வர  மறுத்து சென்று விடுகிறான் .பயணப்படும்போது இரண்டு குழுவாக பிரிந்து விடுகின்றனர் .கடைசியாக குழுவின் தலைவன் சொல்கிறான் .நாம் அடைய வேண்டிய இடம் இதோ வந்து விட்டது  இன்னும் கொஞ்ச தூரம்தான் .என்கிறான் .

கிராமங்களில் நாம் முகவரி விசாரித்து சென்றால் இன்னும் கொஞ்ச தூரம்தான் செல்லுங்கள் என்று ஊக்கம் தருவார்கள் .அதிக தூரம் என்றால் சோர்ந்து விடுவார்கள் என்பதால் ,கொஞ்ச தூரம்தான் செல்லுங்கள் என்று சொல்லியே குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வைத்து விடுவார்கள் .என்றார் .உன்பமைதான் .இந்த அனுபவம் நம்மில் பலருக்கும் உண்டு .

குழுவினர் குறிப்பிட்ட இடத்தை அடைந்தபின் மகிழ்ச்சியே இல்லை .காரணம் சின்ன விசயங்களுக்கு அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வருகின்றது . எப்போது வீடு திரும்புவோம் என்ற மனநிலைக்கு வந்து விடுகின்றனர் .பயணம் சிறக்க ஒற்றுமை அவசியம் என்பதை நன்கு உணர்த்தினார்கள் .

.தீவிரமான கவனம் இலக்கில் இருக்க வேண்டும் .மாடிக்கு செல்ல வேண்டுமானால் .மனதை மாடியில் வை .கண்ணை முதல் படியில் வை .என்றார் .

ஜென் கதை ஒன்று சொன்னார்கள் .குரு அடுத்த சீடனை நியமிக்க வேண்டும் .ஒரு சீடனை அழைத்து மலை மேல் உள்ள மடத்திலிருந்து நூறு சீடர்களை அழைத்து வா என்றார் .சீடனும் சென்று  நூறு சீடர்களை அழைத்து வந்தான் .பாதி வழியிலேயே பாதிபேர் சொந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்று சென்று விட்டனர் .இன்னும் சிலர் மன்னர் நடத்தும் சுயவரத்திற்கு சென்று விட்டனர் .இன்னும் சிலர் எனக்கு துறவறம் பிடிக்கவில்லை என்று சென்று விட்டனர் .கடைசியில்இவனைத் தவிர ஒருவரும் இல்லை .குருவிடம் வந்து நடந்ததை சொனனான் .குரு சொன்னார் .நீதான் அடுத்த தலைமைக்கு தகுதியானவன் என்பது எனக்குத் தெரியும் .நீ உன்னை அறியவே உன்னை அனுப்பி வைத்தேன் என்று சொல்லி விட்டு இறந்து விடுகிறார் .சீடன் தலைமை ஏற்கிறான் .

ஒரு திரைப்படம் பற்றி உரைத்தார்கள் .அப்பாவும் மகனும் மெக்கா செல்கின்றனர் .இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு உண்டு .மகன் விமானத்தில் செல்வோம் என்கிறான் .அப்பா மகிழுந்தில் செல்வோம் என்று சொல்லி மகிழுந்தில் அழைத்துச் செல்கிறார். செல்லும் வழியில் தந்தை ஏழைகளுக்கு பண உதவி செய்கிறார் .மகன் கடிந்து கொள்கிறான் .மெக்கா சென்றதும் மகன் நான் உள்ளே வரவில்லை நீங்கள் செல்லுங்கள் .என்கிறான் .உள்ள சென்ற அப்பா வெளியே வரவில்லை .தேடி இவன் உள்ளே செல்கிறான் .இறந்தவர்கள் சடலத்தில் அப்பாவின் சடலம் உள்ளது .

பின் மகிழுந்தை விற்று விட்டு விமானத்தில் செல்ல நினைக்கிறான். வழியில் கண்ட ஏழைக்கு உதவுகிறான் .மகனும் கருணை உள்ளவனாக மாறுகிறான்.பயணம் அவனை மாற்றியது .என்றார் .  

மற்றொரு திரைப்படம் பற்றி உரைத்தார்கள் .கப்பலில் குழந்தையை விட்டு விட்டு சென்று விடுகின்றனர் .அனாதையாக கப்பலில் வளர்கிறான் .பியானோ நன்றாக வாசிக்கிறான் .போட்டியில் வெல்கிறான் .காதலி வருகிறாள் .அப்போது  கவிதை ஒன்று சொன்னார்கள் .சிறப்பு ."கவிதைப்போட்டி நடந்தது .எல்லோரும் கவிதையோடு வந்தார்கள் .நீ மட்டும் கண்களோடு வந்தாய்" .காதலி கப்பலுக்கு வெளியே அலைகிறாள் மறுக்கிறான்.கப்பல் மிகவும் பழையதாகி விட்டது தகர்க்கப் போகிறோம் .வெளிய வா என்கிறார்கள் அப்போதும் மறுக்கிறான்.தகர்க்கும்போது கப்பலோடு இறந்து விடுகிறான் .மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது இப்படம் 

ரமண மகரிசி "நாம் யார் என்பதை உணர வேண்டும்" என்றார்கள் .நாம் யார் எனபதே நான்கு வகை உண்டு என்று விளக்கினார்கள் .மனதிற்குள் பயணம் செய்ய வேண்டும் அழுக்குகளை அகற்ற வேண்டும் .விழிப்புணர்வே ஞானம் என்றார்கள் .நமக்குள் நாம் பயணம் செய்யும் புனித யாத்திரை நமக்குள் மலர்ச் செய்யும் ரசவாதம் பயணத்தின் விளைவு .என்றார்கள் .மொத்தத்தில் பயணம் உள்ளும் புறமும் இருக்க வேண்டும் என்பதை . நன்கு விளக்கினார்கள் .

கருத்துகள்