தந்தி தொலைக்காட்சியில் 1.6.2019 ஒளிபரப்பான "பயணங்கள் முடிவதில்லை நிகழ்ச்சி பற்றி . கவிஞர் இரா .இரவி

தந்தி தொலைக்காட்சியில் 1.6.2019 ஒளிபரப்பான "பயணங்கள் முடிவதில்லை நிகழ்ச்சி பற்றி . கவிஞர் இரா .இரவி  


கூடுதல் தலைமைச் செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப.அவர்களின் அறிவார்ந்த "பயணங்கள் முடிவதில்லை " உரை கேட்டேன்.

மாணவர்கள் சென்னையில் இருக்கும் போது நான்கு மாவட்டத்தை வேறுபாடாக கருதுகின்றனர் .டெல்லிக்கு உயர் கல்விக்கு செல்லும்போது "நாம் தமிழர் "என்று இணைந்து விடுகின்றனர் .பயணம் ஒற்றுமை வளர்க்கும் என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்கினார்கள் .புரட்சிக் கவிஞர் பாரதி தாசனின் வைர வரிகளை குறிப்பிட்டார்கள் ."இருட்டறையில் உள்ளதடா உலகம் "

உலக இலக்கியத்தில் பயணம் உண்டு .பயண இலக்கியம் என்று தனியாகவும் உண்டு .மெகஸ்தனிஸ் பற்றி ,சந்திர குப்த மவுரியரின் படைகள் பற்றி யானை ,குதிரைகள் பற்றி  குறிப்பிட்டார்கள்.

 கிரேக்கத்திலிருந்து வந்து இந்தியாவில் தங்கி எழுதிய பயண இலக்கியங்கள் பற்றி நன்கு விளக்கினார்கள் .மார்கோ போலோ யுவான்   சுவாங்  பற்றி  குறிப்பிட்டார்கள்.

 ஆம்ஸ்டிராங் நிலவிலிருந்து பூமியைப் பார்த்தபோது அமெரிக்காவோ ,ஆப்கானிஷ்தானோ ,இந்தியாவோ தெரியவில்லை எல்லைக்கோடுகள் எதுவும் தெரியவில்லை ஒரே பந்தாகவே தெரிந்தது என்று குறிப்பிட்டாரம்.உண்மைதான் இந்த எல்லைக்கோடுகள் நாமாக போட்டது அதனால் பல சண்டைகள் ,போர்கள் வருகின்றன .

 மீன்கள் துள்ளும் காட்சிகள் மிக அருமை படத் தொகுப்பிற்கு பாராட்டுக்கள் .அந்த நாட்டில் மீன் பிடிப்பது இல்லையாம் .பசி பட்டினி  வந்தாலும் மீன் பிடித்து உண்பது இல்லை .ஒரு கொள்கையுடன் வாழ்கின்றனர் .அதனால் பயம் இன்றி  மீன்கள் துள்ளி விளையாடுகின்றன .கண்களுக்கு விருந்தாக இருந்தது .

நூறு நாடுகள் பார்த்து உள்ளேன் என்பது பெருமை அல்ல .சில நாடுகள் பார்த்தாலும் ரசித்து விழிப்புணர்வுடன் பார்க்க வேண்டும். என்றாரகள் .

சேகுவாரா மருத்துவ மாணவராக இருந்தார் .பயணம்தான் அவரை போராளியாக மாற்றியது .கைகள் கட்டப்பட்டு துப்பாக்கி முனையில் இருந்தபோதும் உடைந்துபோன இந்தப் பள்ளியை கட்டித் தருவேன் என்கிறார் .சேகுவாரா பற்றி அறிய வாய்ப்பாக  இருந்தது 

ஆப்பிரிக்காவில் முட்டைக்கோசு , காலிப் பிளவர் வளர்க்கச் சொன்னார்கள் வளர்த்தார்கள் நன்றாக பெரிதாக வளர்ந்தன  .நீர் யானைகள் வந்து சாப்பிட்டு சென்று விட்டன .எனவே எது எங்கு விளைவிக்க வேண்டும் என்பதும் முக்கியம் என்றாரகள் .

எந்த நாட்டில் சுதந்திரம் இல்லையோ ? அந்த நாடு என் சொந்த நாடாகும். என்று குறிப்பிட்டதை குறிப்பிட்டார்கள் .

பயணம் நம்மை மேன்மையடையச் செய்யும் என்பதை மிக அழகாக விளக்கினார்கள் .நல்ல நிகழ்ச்சி தொடரட்டும் .வாழ்த்துக்கள் .

கருத்துகள்