மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு!
கவிஞர் இரா. இரவி.
******
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு
மண்ணில் அறிவித்தவர் மகத்தான பெரியார்!
மண்ணில் அறிவித்தவர் மகத்தான பெரியார்!
மானம் என்பது விலங்குகளுக்கு இல்லை
மனிதர்களுக்கு என்றும் வேண்டும் மானம்!
மனிதர்களுக்கு என்றும் வேண்டும் மானம்!
பகுத்தறிவு என்பது விலங்குகளுக்கு இல்லை
பகுத்தறிவு மனிதர்களுக்கு என்றும் வேண்டும்!
பகுத்தறிவு மனிதர்களுக்கு என்றும் வேண்டும்!
விலங்கிலிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுவது
விவேகமான ஆறாம் அறிவு பகுத்தறிவு!
விவேகமான ஆறாம் அறிவு பகுத்தறிவு!
எதையும் ஏன்? எதற்கு? எப்படி? எதனால்?
என்று கேட்டு விடைகளை பெறுவது நன்று!
என்று கேட்டு விடைகளை பெறுவது நன்று!
கேள்வி கேட்காமல் அப்படியே நம்புவது
கணினி யுகத்தில் பொருத்தம் அன்று!
கணினி யுகத்தில் பொருத்தம் அன்று!
மனிதனை மனிதனாக நடத்துவது மானம்
மனிதனிடம் வேறுபாடு காட்டுவது மானமன்று!
மனிதனிடம் வேறுபாடு காட்டுவது மானமன்று!
உன்னைப் பிறர் எப்படி நடத்திட வேண்டும்
உன்னுள்ளம் விரும்புவது போன்றே பிறரை நடத்து!
உன்னுள்ளம் விரும்புவது போன்றே பிறரை நடத்து!
நான் உயர்ந்தவன் என்ற செருக்கை அகற்று
நானிலத்தில் யாவரும் சமம் சிந்தையில் ஏற்று !
நானிலத்தில் யாவரும் சமம் சிந்தையில் ஏற்று !
கேட்டதை எல்லாம் அப்படியே நம்பி விடாதே
கேட்டவை உண்மையா? அறிவால் ஆராய்ந்து பார் !
கேட்டவை உண்மையா? அறிவால் ஆராய்ந்து பார் !
உயிரினங்களில் உயர்ந்த குணம் மனித இனம்
உண்ர்வோடு கலந்தது மனிதனுக்கு மானம்!
உண்ர்வோடு கலந்தது மனிதனுக்கு மானம்!
அறிவு இரும்பு இரண்டு ஒன்று எப்படி
அறவே பயன்படுத்தாதிருந்தால் துருப்பிடித்து விடும்!
அறவே பயன்படுத்தாதிருந்தால் துருப்பிடித்து விடும்!
.
கருத்துகள்
கருத்துரையிடுக