பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு ! புதுமை! கவிஞர் இரா. இரவி.



பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு !

புதுமை!   கவிஞர் இரா. இரவி.


பழைமை இல்லாதது
பரவசம் தருவது
புதுமை!

பகுத்தறிவுப் பகலவன்
எடுத்து இயம்பியது
புதுமை!

அரைத்த மாவை
அரைக்காதது
புதுமை!

அறிவுச் சூரியன்
அம்பேத்கர் மொழிந்தது
புதுமை!

கூறியது கூறாதது
எழுதியது எழுதாது
புதுமை!

முந்தைய சாதனைகளை
முறியடித்துக் காட்டுவது
புதுமை!

மாற்றி யோசித்து
மாற்றி செய்வது
புதுமை!

பழையன கழிந்து
புதியன புகுவது
புதுமை!

எது மாதிரியும் இல்லாமல்
புது மாதிரியாக இருப்பது
புதுமை!

புத்துணர்வு தருவது
பூமிக்குச் சிறந்தது
புதுமை!

முதுமை இளமை
இரண்டும் விரும்புவது
புதுமை!

மை யில்
சிறந்த மை
புதுமை!

கருத்துகள்