நகைச்சுவை மன்றத்தின் மே மாத மாதாந்திர விழா !

நகைச்சுவை மன்றத்தின் மே மாத மாதாந்திர விழா !

நகைச்சுவை மன்றத்தின் மே மாத மாதாந்திர விழா மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனை மேல் அரங்கில் நடந்தது. கலைமாமணி கு .ஞானசம்பந்தன் அவர்கள் அலைபேசியில் வாழ்த்தினார்கள் . சென்னை புத்தகத் திருவிழாவில் கலைமாமணி கு .ஞானசம்பந்தன் அவர்கள் ஆற்றிய  உரை ஒளிபரப்பானது 
வண்டியூர் மாணிக்கராசு வரவேற்றார் 

.நகைச்சுவை மன்றத்தின் பொறுப்பாளர் இசுமத் தொகுத்து வழங்கினார் . இராமநாதபுரம் நகைச்சுவை மன்றத்தின் பொறுப்பாளர் உதவி தலையாசிரியர்   திரு .சந்திரசேகர் அவர்கள் தலைமை வகித்தார் .

கவிஞர் இரா .இரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு   நகைச்சுவை உரை நிகழ்த்தினார்  பெரியவர்கள் முதல் சிறிய குழந்தை வரை நகைச்சுவை துணுக்குகள் சொன்னார்கள் .சிலருக்கு விருதுகளும் வழங்கப்பட்டன .

கவிஞர் இரா .இரவி கல்லூரி மாணவருக்கு ஹைக்கூ 500 நூலை பரிசாக வழங்கினார் 

கவிஞர் இலட்சியம் சிதம்பரம் தன்னம்பிக்கை விழிப்புணர்வு பாடல் பாடினார். இலட்சியம் சிதம்பரம் பேத்தி நகைச்சுவை துணுக்கு சொன்னது .தாத்தாக்களும் பேத்திகளும் கலந்துகொள்ளும் விழாவாக இருந்தது . 

நகைச்சுவை மன்றத்தின் பொறுப்பாளர் சுப்பிரமணியன் கருத்துரை வழங்கினார் .லோகேசு குழுவினரின் நகைச்சுவை நிகழ்ச்சி நடந்தது .நகைச்சுவை குறும்படம் ஒன்று ஒளிபரப்பானது .



































கருத்துகள்