கவிதைச்சாரல் ! நூல்ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! வெளியீடு : திருமதி. இர. ஜெயசித்ரா ! நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா.
கவிதைச்சாரல் !
வெளியீடு : திருமதி. இர. ஜெயசித்ரா !
நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா.
பக்கம் : 64 விலை : ரூ. 15. முதற்பதிப்பு : 1997.
கவிஞர் இரா. இரவி அய்யா அவர்கள் எனக்கு குரு. அவர் தினமலர் நாளிதழில் 2015-ல் எழுதிய கவிதை எழுதுவோம் என்னும் கட்டுரையே முதன்முதலாக என்னை கவிதை எழுத ஊக்கப்படுத்தியது. அய்யா அவர்கள் பல விருதுகள் பெற்றவர்.அவரின் முதல் நூல் கவிதைச்சாரல் அந்நூலுக்கு நூல் மதிப்புரை எழுதுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. நூலின் பின்அட்டையில் கவிஞரின் சுயவிபரம் கொடுக்கப்-பட்டுள்ளது. இந்நூல் கவிஞரின் பெற்றோருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நூலுக்கு வாழ்த்துரை உவமைக்கவிஞர் சுரதா அவர்களால் அணிந்துரை வழங்கப்-பட்டுள்ளது.
நூலின் அழகுக்கு அழகு சேர்க்கும் இரு சான்றோர் பேரா.கவிஞர். மீன்னூர் சீனிவாசன்.
கவிப்பேரரசுஅரு.அருமைநாதன்அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.
கவிஞரின் என்னுரை இதயச்சாரலாய் மலர்ந்துள்ளது. கவிஞரின் பன்முகப்பார்வையாக நூல் எழுதப்-பட்டுள்ளது. இனி கவிதைச்சாரலில் நனைவோம்!
தைத்திருநாளாம் தமிழர் திருவிழா பொங்கல் பண்டிகை முன்னிட்டு நாட்டில் நல்லவை பல நடக்கட்டும் என்பதாக நூல் முன்வைக்கின்றது.
மஞ்சள் கொத்தின் மணம் வீசட்டும்
மங்களப் பொங்கல் பொங்கி வழியட்டும்
வறட்சியும் வெள்ளமும் அழியட்டும்
வளமும் செழுமையும் பெருகட்டும்
ஈழத்தமிழரின் இன்னல் தீரட்டும்
தனித்தமிழ் ஈழம் மலரட்டும்
வேலை இல்லாத் திண்டாட்டம் தீரட்டும்
வாலிபர்களுக்கு வசந்தம் வரட்டும்
பெண்ணிற்குச் சொத்துரிமை வழங்கட்டும்!”
மங்களப் பொங்கல் பொங்கி வழியட்டும்
வறட்சியும் வெள்ளமும் அழியட்டும்
வளமும் செழுமையும் பெருகட்டும்
ஈழத்தமிழரின் இன்னல் தீரட்டும்
தனித்தமிழ் ஈழம் மலரட்டும்
வேலை இல்லாத் திண்டாட்டம் தீரட்டும்
வாலிபர்களுக்கு வசந்தம் வரட்டும்
பெண்ணிற்குச் சொத்துரிமை வழங்கட்டும்!”
என்பதாக நூல் எடுத்துரைக்கின்றது.
சாதனைக்கு உடல் ஊனம் தடையல்ல ஊனமுற்றவர்களாலும் சாதிக்கமுடியும் என்று தன்னம்பிக்கை விதையை பின்வரும் கவிதை வரிகளில் எடுத்துரைக்கின்றது.
“உழைப்பால் ஊனம் அகற்றியவர்கள்
உள்ளத்தால் உயர்ந்து நிற்பவர்கள்!
விழியின்றித் தொலைபேசி இயக்குபவர்கள்!
கால்களை இழந்தபின்னும்
கைகளால் வண்டி ஓட்டுபவர்கள்!
கல்வி நிறையக் கற்பவர்கள்!
கணிப்பொறி கூட இயக்குபவர்கள்!”
உள்ளத்தால் உயர்ந்து நிற்பவர்கள்!
விழியின்றித் தொலைபேசி இயக்குபவர்கள்!
கால்களை இழந்தபின்னும்
கைகளால் வண்டி ஓட்டுபவர்கள்!
கல்வி நிறையக் கற்பவர்கள்!
கணிப்பொறி கூட இயக்குபவர்கள்!”
பெண்களுக்கு முன்னுரை கொடுக்கவேண்டும்
என்பதை நூல் எடுத்துரைக்கின்றது.
பெண்குழந்தை பிறந்தால்
பேதலிக்கும் மனிதர்களே!
மருமகள் கிடைக்காமல்
மண்டியிடும் நாள் வரும்!
ஆட்டுக்குப் பெண் பிறந்தால் மகிழ்ச்சி!
பசுவுக்குப் பெண் பிறந்தால் மகழ்ச்சி!
கோழிக்குப் பெண் பிறந்தால் மகிழ்ச்சி!
பெண்ணுக்குப் பெண் பிறந்தால் ஏன் இகழ்ச்சி!
பெண்ணுக்கு முன்னுரிமை
பேருந்தில் தந்தோம்!
திரையரங்கில் தந்தோம்!
வாழ்க்கையில் தந்தோமா!
பேதலிக்கும் மனிதர்களே!
மருமகள் கிடைக்காமல்
மண்டியிடும் நாள் வரும்!
ஆட்டுக்குப் பெண் பிறந்தால் மகிழ்ச்சி!
பசுவுக்குப் பெண் பிறந்தால் மகழ்ச்சி!
கோழிக்குப் பெண் பிறந்தால் மகிழ்ச்சி!
பெண்ணுக்குப் பெண் பிறந்தால் ஏன் இகழ்ச்சி!
பெண்ணுக்கு முன்னுரிமை
பேருந்தில் தந்தோம்!
திரையரங்கில் தந்தோம்!
வாழ்க்கையில் தந்தோமா!
என்ற வரிகள் மூலம் எடுத்துரைக்கின்றது.
இருமனங்கள் ஒன்றாக இணையும் திருமணம் பற்றி நூல் எடுத்துரைக்கின்றது. வண்ணமலரினம் அன்னவள் மனம்
வஞ்சி அவள் கரம் பிடிக்கும் தோழா
வண்டு இனமாய் உன்மனம் மாறாமல்
பண்டு தமிழ் மரபு காத்திடல் வேண்டும்
வாழ்க்கைத் துணைவியிடம் வம்புகள் பேசாதே!
வண்டு இனமாய் உன்மனம் மாறாமல்
பண்டு தமிழ் மரபு காத்திடல் வேண்டும்
வாழ்க்கைத் துணைவியிடம் வம்புகள் பேசாதே!
என்று இல்லற வாழ்வியல் பற்றி நூல் எடுத்துரைக்கின்றது.
‘குடிகாரன் பேச்சு
விடிந்தால் போச்சு
வேட்பாளர் பேச்சு
வெற்றி பெற்றால் போச்சு.’
விடிந்தால் போச்சு
வேட்பாளர் பேச்சு
வெற்றி பெற்றால் போச்சு.’
இன்றைய அரசியல் வேட்பாளர்கள் வாக்குக்காக மக்களிடம் வாக்குறுதிகளை அள்ளித்தெளிக்கின்றனரி. ஆனால் வாக்குறுதிகளை நடைமுறைபடுத்துவதில்லை என்பதை நூல் எடுத்துரைக்கின்றது.
‘எங்கும் பசுமை எதிலும் பசுமை
தங்கும் இன்பம் திளைத்திடும் புதுமை
தழுவுதல் போன்ற உணர்வினைத் தந்திடும்’
தளிர்குளிர்த் தென்றல் காற்று வீசிடும்
தங்கும் இன்பம் திளைத்திடும் புதுமை
தழுவுதல் போன்ற உணர்வினைத் தந்திடும்’
தளிர்குளிர்த் தென்றல் காற்று வீசிடும்
மலைகளின் இளவரசி கோடைவாழ் தலமான கொடைக்கானல் பற்றி இந்நூல் எடுத்துரைக்கின்றது.
காதலைப்படாதக் கவிஞர் இல்லை. அதன் அடிப்படையில் அய்யா அவர்கள் முதன்முதன்லாக எழுதிய காதல் கவிதை
கடற்கரையில் அமர்ந்திருந்த
என் காதலியின் சிரிப்புக்குத்
தடை விதித்தேன்
காரணம்
கலங்கரை விளக்கம் எனக்கருதிக்
கப்பல்கள் வந்து விடுமே!
என் காதலியின் சிரிப்புக்குத்
தடை விதித்தேன்
காரணம்
கலங்கரை விளக்கம் எனக்கருதிக்
கப்பல்கள் வந்து விடுமே!
இயற்கையின் அழகும் வனப்பும் பற்றி....
கதிரவன் ; உதயத்தைக் கண்டு
களிக்காதவர் காசினியில் எவருமில்லை
இயற்கையின் இனிய படைப்பைப் பார்த்துச்
செயற்கை நகரத்தின் மீது வெறுப்பு
பசுமைப் புற்களின் மணித்துளி மகுடம்
புத்துணர்வான தென்றல் பொழியும்
என்ற கவிதை வரிகளில் எடுத்துரைக்கப்படுகின்றது.
தமிழர் பண்பு பற்றி நூல்
“கல்லும் மண்ணும் தோன்றாமுன்பே
கரத்தில் வாளோடு பிறந்த பண்பு
ஒருவனுக்கு ஒருத்தி என்ற நீதியை
உலக்குக்கு அளித்து தமிழர் பண்பு”
“கல்லும் மண்ணும் தோன்றாமுன்பே
கரத்தில் வாளோடு பிறந்த பண்பு
ஒருவனுக்கு ஒருத்தி என்ற நீதியை
உலக்குக்கு அளித்து தமிழர் பண்பு”
என்ற வரிகள் மூலம் தமிழர்களின் மேன்மை எடுத்துரைக்கின்றது.
இன்றைய சூழலில் மது விற்பனையை அரசே ஊக்குவிக்கின்றது. இதனால் குடி, குடியையே கெடுக்கின்றது. மதுவின் தீமைக் குறித்து நூலானது கீழ்காணும் வரிகள் மூலம் எடுத்துரைக்கின்றது.
‘மதுவினை அருந்தி மகிழ்ந்து வாழ்வது
மதியினை இழந்து மயானம் போவது
சொர்க்கத்தைக் காண்பதாய்ச் சிந்தை செய்வது
சோகத்தை விலைக்காய்ச் சேர்ப்பது எதற்கு?
‘ போதையில் மிதப்பது பெருமை என்றெண்ணி
பாதையை மறந்து போவது சரியா?’
மதியினை இழந்து மயானம் போவது
சொர்க்கத்தைக் காண்பதாய்ச் சிந்தை செய்வது
சோகத்தை விலைக்காய்ச் சேர்ப்பது எதற்கு?
‘ போதையில் மிதப்பது பெருமை என்றெண்ணி
பாதையை மறந்து போவது சரியா?’
என்ற வினா மூலம் கவிதைவரிகள் மதுவின் தீமையை முன் வைக்கின்றது
இந்த உலகில் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும் மனிதநேயத்துடன் நடத்துகொள்ள வேண்டும் என்பதை
‘மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும்
மமதையை விடுத்து யோசிக்க வேண்டும்!
உணர்ச்சி வயப்பட்டு உதிரம் சிந்துதல்
உறவை மறந்து உயர்வை மறைப்பதே!
மக்களாய் வாழ மனச்சுத்தம் வேண்டும்
மனித நேயம் காத்திடல் வேண்டும்!’
மமதையை விடுத்து யோசிக்க வேண்டும்!
உணர்ச்சி வயப்பட்டு உதிரம் சிந்துதல்
உறவை மறந்து உயர்வை மறைப்பதே!
மக்களாய் வாழ மனச்சுத்தம் வேண்டும்
மனித நேயம் காத்திடல் வேண்டும்!’
என்ற வரிகள் மூலம் முன்வைக்கின்றது.
வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து நூல்
‘பல்கலைக் கழகம் பட்டம் மட்டுமா தந்தது?
பார்முழுவதும் பட்டம் விட்டே கழித்தது
வீட்டிலோ தெண்டச்சோறு என்கிற பட்டம்
வீதியில் ஊர்சுத்தி என்கிற பட்டம்
காலியிடமோ கையாலாகாதவன் என்கிற பட்டம்
கடைத்தெருவில் கடன்காரன் என்கிற பட்டம்
இப்படிப் பலபலப் பட்டங்கள் பெற்றும்’
‘பல்கலைக் கழகம் பட்டம் மட்டுமா தந்தது?
பார்முழுவதும் பட்டம் விட்டே கழித்தது
வீட்டிலோ தெண்டச்சோறு என்கிற பட்டம்
வீதியில் ஊர்சுத்தி என்கிற பட்டம்
காலியிடமோ கையாலாகாதவன் என்கிற பட்டம்
கடைத்தெருவில் கடன்காரன் என்கிற பட்டம்
இப்படிப் பலபலப் பட்டங்கள் பெற்றும்’
இன்னும் வேலைதான் இல்லையே !
இன்னும்
என்னும் பட்டதாரிகளின் அவலநிலையை இக்கவிதை வரிகள் எடுத்துரைக்கின்றது.
வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான திருமலைநாயக்கர் அரண்மனை குறித்து
‘மதுரை என்றமணி மகுடத்தில்
மகால் ஒருமின்னிடும் வைரக்கல்
சுற்றுலாப் பயணிகளைச் சுண்டிஇழுக்கும்
கிரேக்கக் கட்டிடக் கலையையும்
முகலாயக் கட்டிடக் கலையையும்
கலவையாகக் கொண்ட புதிய கலை
மதுரை உள்ளவரை மகாலும் உண்டு
உலகம் உள்ளவரை மதுரையும் உண்டு!’
மகால் ஒருமின்னிடும் வைரக்கல்
சுற்றுலாப் பயணிகளைச் சுண்டிஇழுக்கும்
கிரேக்கக் கட்டிடக் கலையையும்
முகலாயக் கட்டிடக் கலையையும்
கலவையாகக் கொண்ட புதிய கலை
மதுரை உள்ளவரை மகாலும் உண்டு
உலகம் உள்ளவரை மதுரையும் உண்டு!’
என்று மகாலின் சிறப்புகளை முன்வைக்கின்றது.
இறந்தபின் உன் கண்கள் திறக்கட்டுமே!
இனிய நல்உலகைக் காணட்டுமே!
தானங்கள் பல உண்டு தாயகத்தில்
தரும்தானம் எதுவென்று தெரிந்திடுவீர்;
பலதானம் செய்திடின் பயன்தருமோ!
கண்தானம் போலொரு நிலைதருமோ!
இனிய நல்உலகைக் காணட்டுமே!
தானங்கள் பல உண்டு தாயகத்தில்
தரும்தானம் எதுவென்று தெரிந்திடுவீர்;
பலதானம் செய்திடின் பயன்தருமோ!
கண்தானம் போலொரு நிலைதருமோ!
இறந்த பின் நம் கண்கள் வீணாய் மண்ணில் மட்கிபோவதைவிட பார்வையற்றவர்க்கு பயன்படட்டும் என்பதாக நூல் முன்வைக்கின்றது.
அழுதுஉன் கோபத்தை நான் மூட்டினாலும்
அணைத்தெனக்குப் பால் ஊட்டினாய் ---உன்றன்
அன்பினை தினம் காட்டினாய்!
பேசாத கல்லெல்லாம் பெரும் தெய்வம் ஆகுமோ
அணைத்தெனக்குப் பால் ஊட்டினாய் ---உன்றன்
அன்பினை தினம் காட்டினாய்!
பேசாத கல்லெல்லாம் பெரும் தெய்வம் ஆகுமோ
பித்தனா நான் ஏற்றிட
உன்றன் பொன்னடியை நான் போற்றுவேன்!
உன்றன் பொன்னடியை நான் போற்றுவேன்!
என்று நூல்இறுதியாக தாயின் அரவணைப்பு அன்பு பற்றி எடுத்துரைக்-கின்றது.
அய்யா அவர்களின் கவிபயணம் கவிதைச்சாரல் தொடங்கி இன்று இருபதாவது நூலான இறையன்பு கருவூலம் மலர்ந்துள்ளது. கவிதைச்சாரல் நூல் பல்சுவை அடங்கிய இனிய நூல்.
கருத்துகள்
கருத்துரையிடுக