தந்தி தொலைக்காட்சியில் 5.5.2019 ஒளிபரப்பான "பயணங்கள் முடிவதில்லை நிகழ்ச்சி பற்றி . கவிஞர் இரா .இரவி !

.

தந்தி தொலைக்காட்சியில் 5.5.2019  ஒளிபரப்பான "பயணங்கள் முடிவதில்லை நிகழ்ச்சி பற்றி . கவிஞர் இரா .இரவி !




கூடுதல் தலைமைச் செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப.அவர்களின் அறிவார்ந்த "பயணங்கள் முடிவதில்லை " உரை கேட்டேன்.பிறப்பு இறப்பு பற்றிய பயம் இன்றி விழிப்புணர்வுடன் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள் .மரண பயம் எல்லோருக்கும் உள்ளது .ஆனால் எளிய மனிதர்களுக்கு . காட்டில்  வாழ்பவர்களுக்கு மரண பயம் இருப்பதில்லை .

குழந்தை விட்டு அம்மா அகன்றதும் அழ ஆரம்பிக்கும் .அடுத்த றையில் இருந்தாலும் அது தெரியாமல்  நிமிடம் இல்லை என்று கருதி  அழ ஆரம்பிக்கும் .

தென்னாலிராமன் பூனை ஒருமுறை சூடான பாலை உணர்ந்து விட்டால் எப்போது பாலை பார்த்தாலும் சூடாகவே இருக்கும் என்று கருதி பயப்படுமாம் .

புத்தரிடம் புல்லாங்குழல் வாசிக்க சொல்கின்றனர் .வாங்கி வாசிக்கிறார் .மிகவும் இனிமையான இசை வருகின்றது. பறந்த பறவைகள் நிற்கின்றன .பட்டாம்பூச்சிகள் நிற்கின்றன.ரம்மியமான சூழல் நிலவுகின்றது .இப்படி அவர் சொல்லும்போது இசையும் காட்சிகளும் மிக நன்று .

புத்தர் சொல்கிறார்  "சிறுவயதில் புல்லாங்குழல் வாசிக்க கற்று இருக்கிறேன் .நான் அப்போதெல்லாம் இவ்வளவு இனிமையாக வாசித்தது இல்லை .காரணம் இப்போது விழிப்புணர்வுடன் வாசித்தேன் .நன்றாக இருந்தது .நானும் ரசித்தேன் ".என்கிறார்.

 இப்படி பல புதிய செய்திகள் சொன்னார்கள் .பாராட்டுக்கள் .
எழுத்தாளர் செயகாந்தன் அழகிரிசாமி பற்றி எழுதிய கட்டுரையில் குறிப்பிட்ட செய்தி .இயக்குனர் பாரதி கிருட்டிணகுமார் எழுதிய பன்றி சாபம் சிறுகதை .அப்போலோ தேவன் கதை .தேவதை கதை, கிரேக்க நாடக ஆசிரியர்கள் மூவரின் சோக முடிவு   .இப்படி பல தகவல்கள் தந்தார்கள் .

அப்பா இறக்காத மகனை இறந்து விட்டதாக முடிவு செய்து விடுகிறார் .உயிருடன் வந்த மகனை தன் மகன் என்று நம்ப மறுக்கின்றார் .முன்முடிவுகள் எடுத்துவிட்டு மாற்றுக்கருத்தை நம்ப மறுப்பதும் மடமை என்பதை கதை மூலம் விளக்கினார்கள் .
மூல பயங்களைக் கடந்து விழிப்புணர்வுடன் வாழ வேண்டிய அவசியத்தை நன்கு விளக்கினார்கள் .

மரணம் வரும்போது வரட்டும் .அதுவந்தபின் நாம் இருக்கப்போவதில்லை .பிறகு எதற்காக மரணத்தை கண்டு அஞ்ச வேண்டும் என்று சொல்லி .மரணம் பயம் நீக்கினார்கள் .பாராட்டுக்கள் .நல்ல நிகழ்ச்சி தொடரட்டும் .வாழ்த்துக்கள் .  

கவிஞர் இரா .இரவி !  

கருத்துகள்