ஹைக்கூ உலா மற்றும் ஹைக்கூ 500 நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை : பி.மஞ்சுளா, முதுகலை ஆசிரியர்; கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி





ஹைக்கூ உலா மற்றும் ஹைக்கூ 500நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !

மதிப்புரை : பி.மஞ்சுளா, முதுகலை ஆசிரியர்;
கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி


வெளியீடு : வானதி பதிப்பகம்,
23, தீன தயாளு தெரு, தியாகராய நகர்,  சென்னை-600 017.

******
கவிஞர் இரா.இரவி அவர்களின் ஹைக்கூ உலா மற்றும் ஹைக்கூ 500 ஆகிய இரண்டு நூல்களையும் வானதி பதிப்பகம் மிகஅழகாக அச்சிட்டு வெளியிட்டுள்ளதுஹைக்கூ என்றால் கவிஞர் இரா.இரவி என்கின்ற அளவிற்கு பேசப்படுபவர்.முண்டாசுக்கவி.பாரதியார்பாவேந்தர் பாரதிதாசன், பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியார் ஆகியோரது வழி செல்லக்கூடியகவிஞர் இரா.இரவி அவர்கள்இவரது ஹைக்கூக்களில் சாதி மத பேதம் அகற்றி மனித நேயத்திற்கும் முற்போக்குசிந்தனைகளுக்கும் முதன்மை இடம் அளித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததுகவிஞர். இரா.இரவியின் ஹைக்கூ உலா நூல் நம்கைகளில் தவழ்ந்தவுடன் அனைவரின் மனதையும் உலாச் செல்ல கனிவுடன் இழுக்கிறது
இவரது ஹைக்கூ நூலினை வாசிக்கும் அனைவரையும் ஹைக்கூ கவிதை எழுதத் தூண்டும் வகையில் மிக மிகஎளிமையானதாகவும் அழகானதாகவும் ர்த்தம் பொதிந்தாகவும் இருக்கிறது.
கைரேகையில் இல்லை
கைகளில்
 உள்ளது
எதி
ர் காலம்
இது போன்ற தன்னம்பிக்கையை உணர்த்தும் வகையில் இன்றைய மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் அனைத்துவகையினரும் பயன்படும் வகையில் ஹைக்கூ கவிதைகள் நிறைய நிரம்பி வழிகிறது.
முதன்மைச் செயலர் முதுமுனைவர். வெ.இறையன்பு .. அவர்களே என்னை இயங்கிக் கொண்டே இருக்கவலியுறுத்தியவர் என்று கவிஞர் இரா.இரவி கூறியிருப்பது நம்மையும் நமக்கு யார் தூண்டுகோலாக இருந்தார்கள்,  இருக்கிறார்கள்என்ற எண்ணத்திற்கு இழுத்துச் செல்வது மிகச்சிறப்பு.
இந்நூலினை வாசிக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் ஹைக்கூ பூக்கள் நிச்சயமாக பூத்துக் குலுங்கும் என்பதில் எவ்வையமும்இல்லை.
ஹைக்கூ 500 நூலில் படத்தைப் பாh;த்தப்பின் கவிதை வாசிக்கவும் என்று எழுதியிருப்பார்.. ஒவ்வொரு படத்திற்கும் அதனைஒத்த 5 கவிதைகளுக்குக் குறையாமல் இருக்கும் ஏழைச்சிறுமியின் உணர்வுகள் ஐந்தறிவுடைய விலங்குகள் எப்படி உள்ளதுஆறறிவுடைய மனிதர்களாகிய நாம் என்ன செய்கிறோம் என்று உணர்ச்சி பொங்க அவரது ஒவ்வொரு ஹைக்கூ வும் இருக்கிறது
பறையைப் பற்றி ஒரு ஹைக்கூவில் சொல்லியிருப்பார்
பெயர் வைத்தது யாரோ?சரியான ஆட்டத்திற்கு
தப்பாட்டம்
 என்று!”
பெண்களைப் பற்றி மிகச் சிறப்பாக அவர்களின் உணர்வுகளை வலிகளை சாதனைகளை புரிதலுடன் எழுதியிருப்பது மேலும்இந்நூலிற்கு சிறப்புச் சேர்க்கிறது.
      கைகள்  இரண்டு
      பணிகள்
 ஆயிரம்
      அசராதவள்
                                மெல்லினம் அல்ல
            வல்லினம்
            பெண்
 
இது மட்டுமல்ல இது போன்ற எண்ணற்ற ஹைக்கூ கவிதைகள் என்னை ர்த்திருக்கின்றன என்னை ர்த்தது போன்றுஉங்களையும்ர்க்கும் ஹைக்கூக்கள் அதிகம் இருக்கும் என்று எனக்கு அதீத நம்பிக்கை இருக்கிறது.
நாம் மறந்து போன நாகரீகம் என்ற பெயரில் தொலைத்த எத்தனையோ காரியங்கள் இந்த ஹைக்கூ நூலில் சிதறிக்கிடக்கிறது.நாம் அதனை வாசித்து அள்ளிக்கொண்டோமானால் நிச்சமாக நாம் தொலைத்த மறந்து போனவற்றை மீட்டு மகிழ்ச்சி கொள்வதுமட்டுமல்லாது சிந்தித்து செயல்படவும் வழிவகுக்கும் என்பதில் சிறிதேனும் ஐயம் இல்லை.
ஹைக்கூ உலா மற்றும் ஹைக்கூ 500 ஆகிய இரண்டு நூல்களையும் வாசித்தலில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததுமட்டுமல்லாது எனக்கு இது ஒரு சிறந்த உலாவாகவும் இருந்ததுதாங்கள் இது போன்ற கவிதைகள் மேலும் மேலும் படைத்துஇலக்கிய உலகிற்கு படைத்திட வேண்டுகிறேன்

கருத்துகள்