தந்தி தொலைக்காட்சியில் 4.5.2019 இன்று ஒளிபரப்பான "பயணங்கள் முடிவதில்லை நிகழ்ச்சி பற்றி . கவிஞர் இரா .இரவி !
கூடுதல் தலைமைச் செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப.அவர்களின் அறிவார்ந்த உரை கேட்டு பயன் பெறுங்கள்
தந்தி தொலைக்காட்சியில் 4.5.2019 இன்று ஒளிபரப்பான "பயணங்கள் முடிவதில்லை நிகழ்ச்சி பார்த்து மகிழுங்கள் .
--
--
தந்தி தொலைக்காட்சியில் 4.5.2019 இன்று ஒளிபரப்பான "பயணங்கள் முடிவதில்லை நிகழ்ச்சி பற்றி . கவிஞர் இரா .இரவி !
கூடுதல் தலைமைச் செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப.அவர்களின் அறிவார்ந்த "பயணங்கள் முடிவதில்லை " உரை கேட்டேன்.புத்தர் பற்றி பல புதிய தகவல் அறிந்திட வாய்ப்பாக இருந்தது .அம்பேத்கர் புத்தர் பற்றி எழுதிய நூலில் குறிப்பிட்ட செய்திகளையும் விளக்கினார்கள் ..
சிறையில் இருந்த மன்னரை ஒருவர் சந்திக்க அனுமதி பெற்று பழச்சாற்றை துணியில் நனைத்துக் கொண்டு சென்று பிழிந்து பழச்சாற்றை வழங்கியதை குறிப்பிட்டார்கள் .இது சிறையில் நடந்த விருந்தோம்பலை உணர்த்தியது .
ஒரு குழந்தை தாயின் கருவறையில் மிக பாதுகாப்பாக உள்ளது .தாயின் இதயத் துடிப்பு கேட்டு வளர்கின்றது .குழந்தை வெளியே வந்ததும் அழுகின்றது .தாய் மார்பில் அணைத்து தாலாட்டும்போது தாயின் இதயத்துடிப்பு மறுபடியும் கேட்டதும் அழுகையை நிறுத்துகிறது .இதுபோல பல தகவல்கள் சொன்னார்கள். பாராட்டுக்கள்
பறவைகளின் அருகே நாம் சென்றால் பயந்து பறந்து விடுகின்றன. ஆனால் புத்தர் பறவைகளிடம் அன்பு செலுத்திய காரணத்தில் பறவை அவரது தோளில் வந்து அமருமாம் .
வேட்டைக்காரன் விரட்ட ,வேட்டைஓநாய் மானை விரட்ட, புத்தர் அருகே ஓடி வந்த மான் அமர ,விரட்டி வந்த ஓநாய் அமர்ந்து இருக்க, இதனைக் கண்ட வேடனும் அமருகின்றான் .காரணம் அங்கு அமைதி நிலவியது .வேட்டை குணம் மறந்து விடுகின்றன .
.நதி நீர் சண்டை புத்தர் காலத்திலும் .இருந்துள்ளது .அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த தண்ணீரை காகம் தட்டு விட்டது முழுமையாக கவிழ்த்த வில்லை .அதனால்தான் காவிரி பிரச்சனை என்று ஒருவர் எள்ளல் சுவையுடன் எழுதிய கவிதையைச் சொன்னார்கள்
ஒவ்வொரு செயலையும் விழிப்புணர்வோடு செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்தினார்கள் .புறநானுற்று காலத்திலும் மரணத்திற்கு பயம் இன்றி போருக்கு அனுப்பிய நிகழ்வை குறிப்பிட்டார்கள் .பயணத்தின் முக்கியத்துவம் விளக்கினார்கள் .
ஒவ்வொரு செயலையும் விழிப்புணர்வோடு செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்தினார்கள் .புறநானுற்று காலத்திலும் மரணத்திற்கு பயம் இன்றி போருக்கு அனுப்பிய நிகழ்வை குறிப்பிட்டார்கள் .பயணத்தின் முக்கியத்துவம் விளக்கினார்கள் .
அரை மணி நேரம் சென்ற விதமே தெரியவில்லை .சொல்லச் சொல்ல காட்சிகளாக விரிவது புதுமை .பட்ட மரம் துளிர்த்து பூத்து குலுங்கிய காட்சி அருமை. விறுவிறுப்பாக இருந்தது .புதுமையாக உள்ளது .பாராட்டுக்கள் ,தொடரட்டும் .வாழ்த்துக்கள் .
.
கருத்துகள்
கருத்துரையிடுக