தந்தி தொலைக்காட்சியில் 25.5.2019 ஒளிபரப்பான "பயணங்கள் முடிவதில்லை நிகழ்ச்சி பற்றி . கவிஞர் இரா .இரவி



.தந்தி தொலைக்காட்சியில் 25.5.2019 ஒளிபரப்பான "பயணங்கள் முடிவதில்லை நிகழ்ச்சி பற்றி . கவிஞர் இரா .இரவி 

கூடுதல் தலைமைச் செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப.அவர்களின் அறிவார்ந்த "பயணங்கள் முடிவதில்லை " உரை கேட்டேன்.

பறவைகள் பற்றி பல அரிய தகவல்களை அறிய வாய்ப்பாக இருந்தது . பறவைகளின் பறத்தல் காட்சிகள் கண்களுக்கும்   மனதிற்கும் மகிழ்ச்சி தந்தது .நீர்காமல் நீட தோற்றம் பயணிக்கும் பறவை .பகலில் மட்டும் பயணிக்கும் பறவை பரவசம் தந்தன . 
பறவை பூச்சியைப் பிடிக்கும் விதம் காட்சி அருமை .படப்பிடிப்பு தொகுப்பு சிறப்பு .அரிஸ்டாட்டில் பற்றி ஆங்கில நூல்கள் பற்றி பல தகவல் வழங்கினார்கள் .ஜூலியஸ் சீசர் பற்றி பெரிக்கல்ஸ் நாடகம் வந்த கதை நன்று .

கொலை செய்யும் போது பறவையே சாட்சி என்று சொல்லி சாகிறான் .கொலைகாரர்கள்  நாடகம் பார்க்கும் போது பேய் பழி வாங்கும் காட்சி வருகிறது .அப்போது பயந்து மேலே பார்க்கிறார்கள் அந்தப் பறவை பறக்கின்றது .பயத்தில் கொலைகாரர்கள்  இறந்து விடுகின்றனர் . நெறி போதிக்கும் நல்ல கதை .

கொக்கு காத்திருந்து மீன் பிடிக்கும் இலக்கியத்தில் வரும் கொக்கு பற்றிய தகவல்கள் .

சிறிய பறவைகளை பெரிய பறவைகள் பிடித்து உண்பதாலும் பறவையினம் அழிந்து வருகிறது .

முதலைக்கு   தண்ணீரில் இருக்கும்போதுதான் வலிமை அதிகம் .நிலத்திலிருந்தால் வலிமை குறைவு .என்ற தகவலும் சொன்னார்கள் .

புண்ணை மரத்தின் கிளையில் விருந்தினராக பறவைகள் வருகின்றன .முழு நிலவின் போது இமயமலையின் காட்சி சிறப்பு வெள்ளி மலையாகவே தெரிந்தது .சூரியன் வரும்போது பொன் மலையாக தெரிந்தது.

கையில் ஒரு குறிப்பு இன்றி நற்றிணையில் வரும் 356 வது பாடல் என்று எண்ணுடன் கூறினார் .

ராஜாளி பறவை பற்றி வாத்துகள் பற்றி பல தகவல்கள் வழங்கினார்கள் .பறவைகளின் மூளையில் ஒருவகை இரும்பு சக்தி உள்ளது அதுதான் பறக்கும் ஆற்றலை வழங்குகின்றது .

கரடி மனிதன் நீதிக் கதை நன்று .மனிதன் குணத்தில் கரடியை விட மோசமாகவே உள்ளன என்பதை உணர்த்தியது . 

முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள் தமிழ் இலக்கியம் ஆங்கில இலக்கியம் இரண்டையும் ஆழ்ந்து படித்தவர் என்பதால் மனப்பாடமாகவே இலக்கிய மேற்கோள்களை வழங்கி பிரமிக்க வைக்கிறார்கள் .பாராட்டுக்கள் .நல்ல நிகழ்ச்சி தொடரட்டும் வாழ்த்துக்கள் . 

கருத்துகள்