தந்தி தொலைக்காட்சியில் 12.5.2019 ஒளிபரப்பான "பயணங்கள் முடிவதில்லை நிகழ்ச்சி பற்றி . கவிஞர் இரா .இரவி !




தந்தி தொலைக்காட்சியில் 12.5.2019 ஒளிபரப்பான "பயணங்கள் முடிவதில்லை நிகழ்ச்சி பற்றி . கவிஞர் இரா .இரவி !

 
கூடுதல் தலைமைச் செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப.அவர்களின் அறிவார்ந்த "பயணங்கள் முடிவதில்லை " உரை கேட்டேன்.

கிளிக்கு உணவு  கொடுக்க மறந்து விடுகிறார்கள் கிளி இறந்து விடுகிறது .குழந்தைகள் இயல்பாக இருக்க விடாமல் படி படி என்று துன்புறுத்தல் தவிர்த்தல் நலம் என்றரர் .
 
பல அறியாத புதிய தகவல் தந்தார்கள் .பல பறவைகள் கண்ணாடியில் முகம் பாரத்தால் அது தன்முகம் என்பது தெரியாது .ஆனால் டால்பினுக்கு தன்முகம் என்பது தெரியும் .அறிவுமிக்கது   டால்பின் .

பறவை சொன்ன அறிவுரைகள் நன்று .இழந்தவற்றிக்கு வருந்தாதே .எல்லோர் சொல்வதையும் அப்படியே நம்பாதே .நடந்ததற்கு வருந்தாதே.நன்று .

1200 பறவைகள் அழிவின் விளிம்பில் உள்ளன பறவையினம் குறைந்துகொண்டே வருகின்றன .இது பூமியின் சமநிலை கோட்பாட்டிற்கு குந்தகம் தரும் .

மயில், வண்ணப்பறவைகள் என  பல்வேறு பறவைகளை காட்சிப்படுத்திய விதம் சிறப்பு .குறும்படம் பற்றிய தகவல் நன்று .பணத்தை பெரிதாக மதித்தவன் கால் விபத்தில் முறிந்ததும் உறவு ,நட்புகள் அருமை அறிகின்றான் .பறவைகளுக்கும் பயணத்திற்கும் உள்ள தொடர்பை நன்கு  விளக்கினார்கள்.

.நாடு விட்டு நாடு பறக்கும் பறவைகள் .பல்லாயிரம் தூரம் பறக்கும் பறவைகள்.சிறிய பறவை .பின்னோக்கி பறக்கும் பறவை இப்படி பறவைகள் பற்றி பல தகவல்கள் தந்தார்கள் .பாராட்டுக்கள் .

இமய மலை உயரத்திற்கு பறக்கும் பறவைகளும் உண்டு அவை 25,000 மீட்டர் உயரத்தில் பறப்பவை ,பத்து  நாட்கள் தொடர்ந்து பயணிக்கும் பறவைகள் .40,000 கி .மீட்டர் தொடர்ந்து பறந்து சாதனை புரியும் பறவைகள் .பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பதை நன்கு விளக்கினார்கள். 

பறக்கும் முன் பயணம் தொடங்குமுன் நன்கு சாப்பிட்டு உடலில் கொழுப்பை ஏற்றிக்கொண்டு தோடர்ந்து பறந்து  கொழுப்பை குறைத்துக்கொள்கின்றன சில பறவைகள். 

மொத்தமாக கூட்டமாக சில பறவைகள் பறக்கும்போது வேட்டையாடப் படுகின்றன .கானாலும் பறவையினம் குறைந்து வருகின்றன .

வேடந்தாங்கலில் தீபாவளிக்கு வெடி வெடிப்பதில்லை. பறவைகளுக்கு சத்தம் கொடுக்க கூடாது என்ற உயர்ந்த எண்ணம். மேலும் பல நாட்டு பறவைகளின் எச்சங்கள் நிலங்களுக்கு உரமாகின்றன .விளைச்சல் பெருகுகின்றது .  

பறவைகள் தங்கும் ஏரிகள் பாதுகாக்க வேண்டும் .இயற்கையின் சமத்தன்மை காக்க பறவையினம் காக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை விதைத்து, பறவை நேசம் கற்பித்தார்கள். பாராட்டுக்கள் .நல்ல  நிகழ்ச்சி வாரா வாரம் தொடரட்டும் .வாழ்த்துக்கள் .

கருத்துகள்