தந்தி தொலைக்காட்சியில் 11.5.2019 ஒளிபரப்பான "பயணங்கள் முடிவதில்லை நிகழ்ச்சி பற்றி . கவிஞர் இரா .இரவி !

https://www.thanthitv.com/Programs/PayanangalMudivadhillai/2019/05/11223843/1035067/Payangal-Mudivathillai-Thanthitv.vpf?fbclid=IwAR1J33UJlSWI1yozjO1-iL0TrvBILOixYjaVy9GKw4EQtfxdX7xfFxKJxNE

தந்தி தொலைக்காட்சியில் 11.5.2019  ஒளிபரப்பான "பயணங்கள் முடிவதில்லை நிகழ்ச்சி பற்றி . கவிஞர் இரா .இரவி !




கூடுதல் தலைமைச் செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப.அவர்களின் அறிவார்ந்த "பயணங்கள் முடிவதில்லை " உரை கேட்டேன்.பறவைகளின் மேன்மையை மிக மென்மையாக உணர்த்தினார்கள் .மகாகவி பாரதியாரின் காலத்தால் அழியாத பாடல்களில் உள்ள வைர வரிகளான "நோக்க நோக்க களியாட்டம் ",காக்கை சிறகினிலே நந்த லாலா"  விளக்கம் அருமை .

'பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்' என்ற பாடல் வரிகள் உண்மையானவை என்பதை உணர்த்தினார் .தட்டான் பூச்சியும் விமானம் உருவாக்க முன்மாதிரியாக இருந்த விதம் அருமை .விமானம் கண்டுபிடிக்க , பட்ட பாடுகள் ,நடந்த விபத்துகள் ,தீ காயங்கள் .விமானம் உருவான விதம் ஆகியவற்றை காட்சிப்படுத்திய விதம் அருமை .

மிதிவண்டி கண்டுபிடித்த விதம் ,முதலில் உருவான மிதிவண்டிகள் வகைகள் யாவும் அருமை .பலவிதமான பறவைகள்    பறக்கும் விதங்களில் காட்சிகள் சிறப்பு .

பேசும் கிளிகள் பற்றிய புதிய தகவல்கள் நன்று. கிளிகள் பேசுவதும் வியப்புதான் . 
பயணங்கள் பயன் தரும் பயணப்படுங்கள் .இயற்கையை உற்று நோக்குங்கள் .ரசித்து மகிழுங்கள் .இப்படி பல விழிப்புணர்வை விதைத்தன
வித்தியாசமான உணர்வைத் தரும் நிகழ்ச்சி தொடர்ந்து    ஒளிபரப்பாகட்டும் .வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள் 

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்