திசையெங்கும் தீப்பொறி! கவிஞர் இரா. இரவி.



திசையெங்கும் தீப்பொறி!
கவிஞர் இரா. இரவி.
******
ஆயிரம் ஆண்டு கால ஆணாதிக்கம் அகற்றுங்கள்
அன்பு செலுத்துங்கள் பெண் குழந்தைகள் மீது!

சாண்பிள்ளை ஆண்பிள்ளை கர்வம் நீக்குங்கள்
சகல துறையிலும் பெண்களை மதியுங்கள்!

பெண் சிரிச்சாப் போச்சு என்ற அக்கால
பேதமைகளை மனதிலிருந்து அகற்றுங்கள்!

ஆண் பெண் பாரபட்சம் வேண்டாம்
ஆண் பெண் சமத்துவம் அவசியம்!

பெண் குழந்தைகளுக்கு கல்வி நல்குவோம்
பெண் படித்தால் பிரபஞ்சம் சிறக்கும்!

பெண்ணை போகப் பொருளாக கருதாதீர்
பெண்ணைப் போற்றி பாராட்டிப் பழகுங்கள்!

பெண் புத்தி பின் புத்தி அல்ல, உணருங்கள்
பெண் புத்தி பின்வருவதை முன் உரைக்கும் !

தொலைநோக்கு சிந்தனை மிக்கவள் பெண்
தரணியில் தன்னிகரில்லாப் பெருமை பெண் !

பெண்கள் சிறந்தால் நாடு சிறக்கும்
பெண்கள் மலர்ந்தால் நாடு மலரும் !

ஆண் பெண் பேதமையை நீக்குங்கள்
ஆண் பெண் சமத்துவம் மலரட்டும்!

சமையலறையிலிருந்து விடுதலையாகட்டும் பெண்கள்
சாதனைகள் படைப்பதற்கு வாய்ப்பு வழங்குவோம்!

பெரியார் அன்றே சொன்னார் பெண் விடுதலை
பாரதியார் நன்றே சொன்னார் பெண் விடுதலை

கருத்துகள்