படைப்புலகில் வாழ்வார் மகேந்திரன்!
கவிஞர் இரா. இரவி.
அலெக்சாண்டர் என்பது உனது இயற்பெயர்
அனைவருக்கும் மகேந்திரன் என்றாலே தெரியும்!
உதிரிப்பூக்கள் திரைப்படம் இயக்கி மனங்களில்
உதிராத பூக்களாக இடம் பிடித்தாய்!
முள்ளும் மலரும் திரைப்படத்தின் மூலம்
மலராக மலர்ந்தாய் மக்கள் மனங்களில்!
இளையராசாவுடன் இணைந்து பல திரைப்படங்களில்
இனிய பாடல்கள் வந்திட காரணமானவர்!
உள்ளத்து உணர்வுகளை திரைப்படங்களில்
உள்ளபடி உணர்த்தி காவியம் படைத்தவர்!
வன்முறையை பிரமாண்டத்தை விரும்பாதவர்
வளமான கருத்துக்களை திரையில் பதித்தவர்!
நடிகர்களுக்கு நல்ல பெயர் வாங்கி தந்தவர்
நாடறிந்த இயக்குநராக வலம் வந்தவர்!
எளிய மனிதர்களை நேசித்த எளிய மனிதர்
எளியவர்களை திரைப்படத்தில் காட்சிப்படுத்தியவர்!
லட்டு என்ற கையெழுத்துப் பிரதி நடத்தியவர்
லட்டுப் போன்ற வசனங்களை திரைப்படத்தில் வைத்தவர்!
நாவல்களின் ரசிகனாக இருந்து படித்தவர்
நாவல்களின் தாக்கத்தில் திரைப்படங்கள் வடித்தவர்!
எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்க நினைத்தவர்
இறுதியாக தெறி படத்திலும் தெறிக்க விட்டவர்!
தனது வெற்றி என்று தம்பட்டம் அடிக்காதவர்
தனது வெற்றியை பலரின் கூட்டு வெற்றி என்றவர்!
பாலுமகேந்திராவின் விழிவழி காட்சிப்படுத்தியவர்
பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி வென்றவர்!
மசாலாப்படத்தை திரையில் என்றும் விரும்பாதவர்
மசாலா இன்றியே மாற்றங்கள் விதைத்தவர்!
தனித்த அடையாளத்தில் தனி முத்திரை பதித்தவர்!
தனக்கென தனிப்பாதை வகுத்து சீடர்களை உருவாக்கியவர்!
படைப்புகளில் என்றும் வாழ்வார் மகேந்திரன்
படங்களில் நின்று வாழ்கிறார் மகேந்திரன்!
கருத்துகள்
கருத்துரையிடுக