விடுதலைப் போராட்ட வீரர் அணுகுண்டு அய்யாவு அறிமுகம் ! கவிஞர் இரா .இரவி !
அணுகுண்டு அய்யாவு இவர் விடுதலைப் போராட்ட வீரர் . மதுரை வடக்கு மாசி வீதியைச் சேர்ந்தவர் .பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களுடன் நட்பாக இருந்தவர் .இருவரும் வடக்கு மாசி வீதியில் ஒரே இல்லத்தில் வாழ்ந்து இருக்கிறார்கள் .பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களைப் போலவே அணுகுண்டு அய்யாவு அவர்களும் திருமணம் செய்யாமலே வாழ்ந்தவர் .
இவரைச் சுற்றி ஒரு சிறுவர் கூட்டம் எப்போதும் இருக்கும் தினமும் சிறுவர்களுக்கு மிட்டாய் வழங்குவார் .சிறுவர்கள நேருவைப் போல மிட்டாய் மாமா என்றே செல்லமாக அழைப்பார்கள்.
நாட்டின் விடுதலைக்காக பலமுறை சிறை சென்றவர் .வருடக் கணக்கில் சிறையில் துன்பம் அனுபவித்தவர் .இவருடைய தம்பிதான் செல்லையா ஆவார் .அவரும் விடுதலைப் போராட்ட வீரர்.அவர் பற்றிய அறிமுகம் தனியாக வரும் .செல்லையா அவர்கள் எனக்கு தாத்தா ( அம்மாவின் தந்தை ).என்னை வளர்த்தவர் .
அணுகுண்டு அய்யாவு அவர்கள் ஆன்மிகவாதி .நடிகவேள்
எம். ஆர் .இராதா அவர்கள் மதுரையில் இராமாயணத்தை கிண்டல் செய்து கீமாயணம் நாடகம் போட்டப்போது ,போடக் கூடாது என்று அணுகுண்டு அய்யாவு எச்சரித்து இருக்கிறார் .அதை மீறி நடிகவேள் எம். ஆர் .இராதா அவர்கள் நாடகத்தை நடத்திய போது நாடகப் பந்தலுக்கு தீ வைத்து நாடகத்தை பாதியில் நிறுத்தி இருக்கிறார் . அணுகுண்டு அய்யாவு அவர்களின் தம்பி செல்லையா அவர்களின் பேரனான நான் ( கவிஞர் இரா .இரவி ) நான் கடவுள் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவாளன் .
அணுகுண்டு அய்யாவு அவர்கள் பேராயக் கட்சியில் இருந்தார். தேர்தலில் பலமுறை நின்று வெற்றியும் தோல்வியும் பெற்றுள்ளார். பேராயக் கட்சியில் நிற்க விடாத போது சுயேச்சையாகவும் தேர்தலில் நின்று உள்ளார் . அணுகுண்டு அய்யாவு அவர்களுக்கு எம்ட்டன் என்ற பட்டப் பெயரும் உண்டு .
வடக்கு மாசி வீதியில் உள்ள வாலிபர்களை ஒன்று திரட்டி விடுதலைக்காக போராட விதத்தில் பெருபங்கு ஆற்றியவர் .தந்து வாழ்க்கையையே விடுதலைக்காக அர்பணித்தவர் .இன்று நாம் வாழும் விடுதலை வாழ்க்கைக்கு வித்திட்ட பெருமை அணுகுண்டு அய்யாவு ,செல்லையா போன்றவர்களின் தியாக வாழ்க்கை .
இன்று நாம் வாழும் விடுதலை வாழ்க்கைக்கு வித்திட்ட பெருமை அணுகுண்டு அய்யாவு ,செல்லையா போன்றவர்களின் தியாக வாழ்க்கை .
அணுகுண்டு அய்யாவு ,செல்லையா இவர்களின் தம்பிகளான .அ .வ நாணன் (நாராயணன் என்ற பெயரை நாணன் மாற்றிக் கொண்டவர் ),அ .வ .இராம கிருஷ்ணன் இருவரும் தி .மு .க . வில் பெரிய பொறுப்புகளில் இருந்தார்கள் .மற்றொரு தம்பி பெயர் போஸ். சகோதரர்கள் வேறு கட்சிகளில் இருந்தாலும் அவர்களுக்குள் சண்டை வந்தது இல்லை .அனைவரும் மறைந்து விட்டனர் .ஆனால் அவர்கள் செய்த தொண்டை மக்கள் மறக்க வில்லை .
அணுகுண்டு அய்யாவு அவர்கள் இறுதி நாட்களை சென்னையில் கழித்து சென்னையில் காலமானார் .
-------------------------------------------------
அவருடைய அரிய படத்தை அனுப்பி உதவிய எனது தாய் மாமா, என் தங்கையின் கணவர் திரு .செ.இராதா கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி .
கருத்துகள்
கருத்துரையிடுக