பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு தலைமை! கவிஞர் இரா. இரவி.
பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு
தலைமை!

கவிஞர் இரா. இரவி.

******

தேடிச் செல்லாதே
தேடி வரட்டும்
தலைமை!

நற்செயல்களால்
நாடி வரும்
தலைமை!

தன்னலம் மறந்து
பொதுநலம் பேணுதல்
தலைமைக்கு அழகு!

ஏற்கும் முன் யோசி
ஏற்ற பின் யோசிக்காதே
தலைமை!

வாரிசாக வருவதல்ல
திறமையில் வருவது
தலைமை!

சிறப்பாகச் செயல்பட்டால்
சரித்திரத்தில் இடம்
தலைமை!

சொல் செயல்
வேறுபாடு கூடாது
தலைமை!

ஆணவமின்றி
ஆமையாக இருந்தால் அழகு
தலைமை!

பாரபட்சமின்றி
சமநோக்கு
தலைமைப்பண்பு!

தலைக்கனம் இன்றி
தன்மையோடு இருத்தல்
தலைமை!

பொறுப்பு மிக்கது
வேண்டும் கவனம்
தலைமை!

தொண்டரின் துயர்
துடைத்திட வேண்டும்
தலைமை!

ஒழுக்கம் இருந்தால்
உன்னைத் தேடி வரும்
தலைமை!

அதிகாரம் செய்யாது
அன்பு செலுத்த வேண்டும்
தலைமை!

ஊழல் இன்றி
உண்மை இருத்தல்
தலைமை!

பலரும்
பயன்படுத்துகின்றனர்
தலை     மை

கருத்துகள்