படித்ததில் பிடித்தது. கவிஞர் இரா .இரவி ஹைக்கூ. கவிதாயினி பி.மஞ்சுளா நெல்லை.
படித்ததில் பிடித்தது. கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ. கவிதாயினி பி.மஞ்சுளா நெல்லை.

விளைந்ததும்
தலைகுனிகின்றன
நெற்கதிர்கள்....
எதைச் சொன்னாலும்
மறுதலிக்கிறது
வாலிப வயது.....
எவ்வளவு மிதித்தாலும்
எவரையும் தாங்குகிறது
மிதியடி.....
சிறையில் அடைத்தாலும்
சிறைப்படுவதில்லை
மனம்......
என்னுள் ஜீவிக்கிறது
ஜீவனாக
தமிழ்.....,.
சுகத்தையும்
சுறுசுறுப்பையும் தருகிறது
நடைப்பயிற்சி....
மருமகள் மகளாக மாறினாலும்
மாற மாட்டார்கள்
மாமனார் மாமியார்.....
யோசித்தேன் வரவில்லை
காதலித்தேன் வந்தது
கவிதை....
தலைவிரிக் கோலமாய்
எங்கும் தாண்டவமாடுகிறது
சாதிவெறி...

கருத்துகள்