28-04-2019 அன்று ‘ தந்தி ‘ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பயணங்கள் முடிவதில்லை’ பற்றி கவிஞர் இரா. இரவி.
கவிஞர் இரா. இரவி.
******
கூடுதல் தலைமைச் செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள். அலெக்சாண்டர் கதையை அற்புதமாகச் சொன்னார்கள். நண்பர் மருத்துவர் பிலிப் மருந்து தருகிறார். அது நஞ்சு என்று மடல் வந்து இருக்கிறது. வாங்கு குடித்துவிட்டு அந்த மடலை மருத்துவ நண்பரிடமே வழங்குகிறார். 3 நாளில் குணமாகி விடுகிறார். நட்பில் சந்தேகம் வரக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி இருந்தார்.
நண்பர் வீட்டில் சாப்பிடும் போது குறை இருந்தால் சொல்லக் கூடாது. அதனை அவரிடம் மட்டுமல்ல, வெளியில் வந்து பிறரிடம் புகார் வாசிக்கக் கூடாது என்ற நல்ல பண்பை வலியுறுத்தி வந்தார்.
குறும்படத்தின் கதை சொன்னார். சாலையோர கடையில் வேலை பார்க்கும் ஒருவர், தண்ணீர் பாட்டில் இருந்த ஒரு சொட்டில் தாகம் தணிக்கிறார். இதனைக்கண்ட சிறுமி சாக்லெட் தருகின்றது. உணவகத்தில் உணவு தருகின்றனர். இரவு இல்லம் சென்று வயதான மனைவிக்கு உணவு தருகிறார். பூனை வருகின்றது அதற்கும் தருகின்றனர் . சிறுமி தந்த சாக்லெட்டை மனைவியிடம் தருகிறார். மனைவி அதனை பிய்த்து கணவருக்கும் தருகிறார். இப்படம் பார்த்ததிலிருந்து சாலையோர உணவக பணியாளர்கள் மீது பரிவும் கனிவும் எனக்கு வந்தது ஓர் இலக்கியம் என்பது கனிவை கசிய வைக்க வேண்டும் என்ற வறியவர்களுக்கு இரங்கும் இரக்கத்தை வலியுறுத்தினார். சிறப்பு.
எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன் கதை சொன்னார். நல்ல கதை, ஒரு குடும்பத்தை ஏமாற்ற நினைத்த புரோக்கர் அவர்கள் தந்த கேசரி நன்று . (வேண்டியவர்கள் வந்தால்) இனிப்பு இரண்டு கரண்டி கூடுதலாகப் போட வேண்டும் என்று என் அம்மா சொல்லி இருக்கிறார்கள் என்றதும் ஏமாற்ற நினைத்தவர் மனம் மாறி பிரச்சனையான நிலத்தை வாங்கி ஏமாற வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்.
செயமோகனின் சோத்துக்கணக்கு என்ற கதையும் நன்று. சக எழுத்தாளர்களின் கதைகளை மேற்கோள் காட்டிடும் உயர்ந்த பண்பு எல்லோருக்கும் இருப்பதில்லை. முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களுக்கு உள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக